பக்கம்:அடுநெய் ஆவுதி.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. சீர்சால் வெள்ளி

பல்யானைச் செல்கெழுகுட்டுவன், பாரெலாம் போற்றும் பேரரசய்ை வாழ்தற்காம் காரணம் யாது. என்பதை, அவன் அரசவைக்கண் சிலநாள் வாழ்ந்து பழகியதால் அறிந்து கொண்டார் புலவர். பல்யானைச் செல்கெழுகுட்டுவன் போர் நுணுக்கம் அறிந்தவன்; நாடாளும் நன்னெறியை நன்கு தேர்ந்தவன்; மனையற மாண்பு உணர்ந்தவன். எத்துறையி லும் கைவந்தவன். அவன் ஆற்றலை அளந்து காணல் எவராலும் ஆகாது.

அணிவகுத்து நிற்கும் பகைவர் படையுள் பிளவுகண்டு உட்புகுதல் இயலாது;என்ற செய்தியை, அவன் கேட்கப்பொருன். அந்நிலை வந்துற்றக்கால் பகைப்படையும் அவன் ஆற்றல் பொருது. வானத்து மின்னலென ஒளிவீசும் தன் வாளைப் புலித்தோலால் ஆன உறை கழித்து ஏந்திக் களம் புகுவன். தன்னைப் போலேவே வாளேந்தி நிற்கும் வீரர்க்குத், தான்ே தலைவனகி, ஒருசில வீரர்களைக் கொண்ட அச்சிறு தூசிப்படையை மட்டுமே, உடன் கொண்டு சென்று, உட்புகற்கு அரியது என உரம் பேசி நிற்கும் பகைப்படை அணிவகுப்பைத் தாக்கிப் போரிட்டுச் சிதறடித்துச் செருவென்று மீள்வன். அவன்தலைமை தாங்கும் அவன் தூசிப்படை. அத்துணை ஆற்றல் மிகுந்ததாகிவிடும். பகைவர்களின் பேரண்களை மட்டுமேயல்லாமல், அப்பகைவரின் பெரிய பெரிய கோட்டை. களையும் பாழ்செய்து விடும், பல்யானைச் செல்கெழுகுட்டுவன் தலைமைக்கீழ்ப் பணிபுரியும் சேரநாட்டுத் தூசிப்படை.

61

61

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அடுநெய்_ஆவுதி.pdf/71&oldid=1293701" இலிருந்து மீள்விக்கப்பட்டது