பக்கம்:அடுநெய் ஆவுதி.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'மனை விழைவார் மாண் பயன் எய்தார் வினைவிழைவார் வேண்டாப் பொருளும் அது’ என்ப. நாடாளும் மன்னவன் மனையற வாழ்க்கையிலேயே நாளைக் கழித்துவிடின், அவன் நாடு நலம்பெருது. மனையறம் எத்துணைதான்் மாண்புடை யேதயாயினும், மனைவி மக்கள் மகிழ, மனையின் கண் இருக்க வேண்டுவது மன்னனுக்கும் வேண்டுமானுலும், பேரரசர்கள் தம் வாழ்நாளின் பெரும் கு தி யை நாடுகாவல் குறித்த பாசறையிலேயே கழித்தல் வேண்டும். நாட்டின் நல்வாழ்விற்கு அது நணிமிக இன்றியமையாதது. தன் நலனைக்காட்டிலும், தன் நாட்டவர் நலனையே நாடுவர் நல்லரசர். இதை உ ண ர் ந் த வ ன் பல்யானைச்செல்கெழுகுட்டுவன். அதனால், வில் நாணத் தளர்த்தாமலும், தேர்ந்தெடுத்த அம்புகளைக் கைநழுவ விடாமலும், எந்நாழிகையிலும் போர் உணர்வே உடையராய், விழித்தகண் விழித்தபடியே வீற்றிருக்கும், வில்வீர்கள் போலும் போர் நலம் பலவற்ருலும் நிறைந்துதிருக்கும் பாசறை வாழ்க்கையினையே, பல்யானைச். செல்கெழுகுட்டுவன் பெரிதும்விரும்பி மேற்கொண்டு வாழ்ந்து வந்தான்்.

நீரின் தன்மையையும், அகழ்வாரைத் தாங்கும் நிலத்தின் பொறையையும், தீயின் அழிவாற்றலையும், மலைமுடி உருட்டும் காற்றின் பேராற்றலையும், வானத்தின் பரப்பையும் அளந்து காணல் எவர்க்கும் ஆகாது? அவற்றை ஒரோவழி அளந்து காண்பது இயலும் என்ருலும், பல்யானைச் செல்கெழு குட்டுவனின், அண்டினேரை ஆட்கொள்ளும் அருளுடைமை' நண்பர் பிழைபொறுக்கும் பொறையுடைமை, பகை அழிக்கும் பண்பு, அசைக்கலாகா மெய்வன்மை, பரந்து அகன்ற பேரறிவு ஆகிய பண்புகள் ஆகியவற்றை அளந்து காணல் இயலாது, அவன்பால் அத்துணைப் பெருமளவில் அவை குடிகொண்டிருந்தன.

63

63

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அடுநெய்_ஆவுதி.pdf/73&oldid=1293703" இலிருந்து மீள்விக்கப்பட்டது