பக்கம்:அடுநெய் ஆவுதி.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

શકે, ஆற்றல் அருமுயற்சி ஆகிய தலலியல்பால் தன்னேரின்றி வாழ்ந்த பல்யானைச் செல்கெழுகுட்டுவனுக்கு இயற்கையின் பெருந்துணையும் பொருந்த வாய்ந்திருந்தது. 'கோன்நிலை திரிந்திடின் கோள்நிலைதிரிம்; கோள் நிலைதிரியின் மாரிவறங்கூரும். மாரிவறங்கூரின் மன்னுயிர் இல்லை' என்பது உலகம் கண் உண்மை. பல்யானைச் செல்கெழு. குட்டுவன் அறமுறை அரசு செலுத்தும் அமைவுடைமையால், ஏனைய விண்மூன்களுக்கு இல்லாப் பேரொளி வாய்ந்து வானத்தில் உலாவரும் வெள்ளியாகிய கோள், உலகநலம் காட்டும் குறிப்போடு சிறிதே வடக்கே தாழ்த்து நிற்பதோடு ஏனைய கோள்களுய் நலங்குறிக்கும் இடங்களில் நிற்கும். அதனல், பேரொலி எழுப்பும் இடிமுதலாம் கருவிகளோடு மனை முடிகளில் படிந்து, உலகத்து உயிர்கள் எல்லாம் உய்யும் பொருட்டு, வலமாக எழுந்து இடிக்கும், வடகிழக்கிலிருந்து வந்து வீசும் கொண்டல் கொண்டு வரும் நீர் உண்ட கார்மேகங்கள் தாம் பெய்யவேண்டிய கார்காலத்தில் பெய்யாது பொய்த்து விடுமாயிம், பல்யானைச் செல்கெழுகுட்டுவன் நாட்டில் நாள்தோறும் புதுப்புது வருவாய்கள் பெருகும். அதல்ை இவ்வளவுதான்் கிடைக்கும் ஆகவே இவ்வளவே உண்டல் வேண்டும் என்ற வ ைர ய ைற வேண்டாது, வேண்டுமளவு உண்பவரும், தின்பவரும் ஆகிய விருந்தினர்கள் யாவரும், வள்ளைப்பாட்டு என்ற உலக்கைப்பாட்டு ஓயாது ஒலிக்க நெல்லைக் குற்றிக்குற்றிக் பூண் தேய்ந்து போன உலக்கைகளையும், ஆங் காங்கே அடுக்கி வைக்கப்பெற்றிருக்கும் சோறு சமைக்கும் பெரும்பானைகளையும், ஊனைக் கத்திகொண்டு கொந்தியதால் அதன் குருதிக்கரை படிந்து செந்நிறம் பெற்ற கரிகொந்தும் சட்டைகளையும், அள்ள அள்ளக் குறையாப் பெருஞ்சோற்று மலைகளையும் கண்டு மருண்டு, பல்யானைச் செல்கெழுகுட்டுவன் நாட்டுப் பெருவளப் பெருமையை வியந்து பாராட்டுவர்.

64

64

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அடுநெய்_ஆவுதி.pdf/74&oldid=1293704" இலிருந்து மீள்விக்கப்பட்டது