பக்கம்:அடுநெய் ஆவுதி.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வயங்கு கதிர் விரிந்து வானகம் சுடர்வர . வறிது வடக்கு இறைஞ்சிய சீர்சால் வெள்ளி 25. பயங்கெழு பொழுதொடு ஆநியம் நிற்பக்

கலிழும் கருவியொடு கையுற வணங்கி மண் உயிர் புரைஇய வலன் ஏர்பு இரங்கும் கொண்டல் தண்தளிக் கமஞ்சூல் மாமழை கார் எதிர்பருவம் மறப்பினும் 30 பேரா யாணர்த்தால், வாழ்க நின் வளனே!”

துறை: இயன்மொழி வாழ்த்து வண்ணம்: ஒழுகுவண்ணம் தூக்கு: செந்தூக்கு பெயர் : சீர்சால் வெள்ளி

படைத்தலைவ! திருந்திழை கணவ குருசில்! அளப்பருங்குரையை, நின் பெருக்கம் இனிது கண்டிகும் (1-17) வெள்ளி நிற்ப, மழை மறப்பினும் (22-29) உண்மரும் தின்மரும் (18) யாவரும் (21) உலக்கை, மடா, ஊனம் கண்டு மருளும் வாடாச் சொன்றிப் (18-22) பேராயாணர்த்து வாழ்க நின் வளன். (30) என கொண்டு கூட்டிப் பொருள்கொள்க.

நெடுவயின் ஒளிறும் மின்னு = உயர்ந்த வானத்தின் கண் ஒளிவீசும் மின்னல். பரந்தாங்கு = பரந்து வெளிப்பட்டது போல். புலி உறைகழித்த = புலித்தோலால் ஆன உறைகழிக்கப் பெற்ற புலவு வாய் எஃகம்=பகைவர்களின் குருதிக்கரை படிந்துள்ளமையால் புலால் நாறும் வாளை, மேவல் ஆடவர் = எக்காலமும் போரே விரும்பும் வீரர்கள். வலன் உயர்த்து ஏந்தி ச வலக்கைகளில் வன்மையாக ஏந்தி. ஆர் அரண் கடந்ததார் = பகைவர்களின் பற்றற்கரிய கடத்தற்கரிய பகைவரது படை வரிசையுள் பாய்ந்து பீடு கொள்மாலை = வெற்றி, கொள்ளும் இயல்பினை உடைய.

66

66

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அடுநெய்_ஆவுதி.pdf/76&oldid=1293706" இலிருந்து மீள்விக்கப்பட்டது