பக்கம்:அடுநெய் ஆவுதி.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரும்படைத் தலைவ - பேரரண்களை வென்ற தூசிப் படையால். அருந்தகைப்பின் = பகைவரின் .ெ ப. ரி ய படைத்தலைவனே. ஓதல் வேட்டல் அவை பிறர்ச் செய்தல், ஈதல் ஏற்றல் என்று அறு புரிந்து ஒழுகும் ச வேதம் ஓதல், வேள்விவேட்டல், வேதம் ஒதுவித்தல், கேள்வி வேட்பித்தல், ஈதல், ஏற்றல் என்ற ஆறு தொழில்களையும் விரும்பிச் செய்யும். அறம்புரி அந்தணர் - அறநூற் பயனையே விரும்பும் அந்தணர்களை. வழிமொழிந்து ஒழுகி= வழிபட்டு ஒழுகி, ஞாலம் நின்வழி ஒழுக = அதல்ை உலகத் தவர் உன்னை வழிபட்டு ஒழுக. பாடல் சான்று = புலவர் பாடும் பு க ழ ல் நிறைந்து. நாடு உடன் விளங்கும் = உலகனைத்தும் பரந்த விளங்கும் நாடா நல் இசை = தான்ே வந்தடைந்த நல்ல புகழையும், திருத்திய இயல்மொழி - திருந்திய இனிய சொற்களையும் உ ைடய திருந்திழை கணவ - சிறந்த அணிகள் அணிந்த அரசமாதேவியின் கணவனே! குலை இழிவு அறியாச் சாபத்து=நாணத்தளத்தி அறியாத வில்லையும். களைவு அறியா அம்பு வயவர்=கைகளிலிருந்து களைந்து அறியாத அம்புகளையும் உடைய வீரர்கள். தூங்கு துளங்கு இருக்கை = போர் வேட்கையால் விரைந்து செல்லும் விருப்போடு திரண்டிருக்கும் இருக்கையும். இடாசு ஏணி இயல் அறை = வன்மைக்கு ஏதுவாகிய எல்லா நலங்களும் பொருந்த அமைக்கப்பெற்ற பாசறையும் உடைய குருசில் = வேந்தே, நிலம் நீர் தீ வளி விசும்போடு ஐந்தும் அளந்து கடை அறியினும் = நிலம், நீர், நெருப்பு, காற்று விசும்பு என்ற ஐந்தினையும் அளந்து முடிவு காணினும். அளப்பருங்குரையை = அறிவு முதலிய நின் அரும்பண்புகளில் அ ள ந் து காண்பதற்கு அரியை ஆகுவை. நின்வளம் விங்கு பெருக்கம் இனிது கண்டிகும் = நின்வளம் மிக்க பெருநலத்தையாம் இனிது கண்டு மகிழ்ந்தோம். வயங்கு கதிர் விரிந்து = விளங்குகின்ற ஒளிக்கதிர்கள்

67

67

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அடுநெய்_ஆவுதி.pdf/77&oldid=1293707" இலிருந்து மீள்விக்கப்பட்டது