பக்கம்:அடுநெய் ஆவுதி.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெற்றுப் பறக்கும் புள்ளினப் பிறப்புடைய கொல்லோ எனப் பார்ப்பவர் வியக்கும் வகையில் விரைந்தீர்த்துச் செல்ல, தேர் முகட்டில்கட்டப்பெற்ற, விற்பொறித்த வெண்நிற கொடிகள், வாணாளாவ உயர்த்த மலை முடிகளிலிருந்து, வெண்னுரை தெரிக்க உருண்டோடி வரும் மலையருவிகளின் மாண்புமிகு காட்சியைக் காட்டின.

தேர்ப்படைகளைத் தொடர்ந்து சென்ற யானைகளின் கடுத்த ப ார் ைவ. கண்டவரைக் கலக்க முறுத்துவதாக, அவற்றின் மத்தகத்திலிருந்து பெருகி வழியும் மதநீர் நாற்றம், பகைவர் நாட்டிலும் சென்று நாறி, அந்நாட்டு மக்களை முன்கூட்டியே மருட்டுவதாயிற்று.

களிற்றுப் படையைப் பின்பற்றிச் சென்றது காலாட்ட படை. படைவீரர் சென்றிரீலர் கொல்லோ? படைக்கலங்கள் மட்டுமே சென்றனகொல்?’ எனப், பார்த்தவர் ஐயுறுத்தக்க வகையில், வாளும், வேலும், வில்லும், கணையுமே எங்கும் காட்சி அளிக்க, வீரர்கள் அணிவகுத்துச் சென்றனர்.

அவ்வாறு சென்ற அவன் நாற்படையைப் பின்பற்றிச் சென்ற புலவர், அப்படை நிகழ்ச்சிகளையும் நேரில் கண்டார். காற்றென விரைந்த குதிரைகள், வரிசை வரிசையாகக் குதித்துக் குதித்து ஓடி, வலமும் இடமுமாக வளைய வந்ததன் விளைவால், அந்நாட்டு மேட்டுபுலக் கொல்லைகளெல்லாம் குழிப் பள்ளங்களாகி விடவே, ஏர் நடத்தற்கு இயலாப் பார் நிலங்களாகிப் பாழுற்றுப் போயின. மலைகளோ என மருளத்தக்க பருவுடல் படைத்த யானைகளின், பனையடி நிகர்க்கும் பெரிய கால்களால், பலகால் மிதியுண்ட நன்செய் நிலங்களெல்லாம் அழுந்தி அழுந்தி, கலப்பையின் கொழு முனையும் நுழையலாகா வன்னிலங்களாய் மாறி மாண்பிழந்து போயின. வாள்

70

70

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அடுநெய்_ஆவுதி.pdf/80&oldid=1293711" இலிருந்து மீள்விக்கப்பட்டது