பக்கம்:அடுநெய் ஆவுதி.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முரசோடு, கொடிநுடங்க, பரி அகைப்ப, நீ தேரோட்டிய பிறர்நாடு (10-13). நாஞ்சில் ஆடா வளம் பரப்பு அறியா: மன்றம் கழுதைபோக, எயில் தோட்டிவையா; அழல் ஆடிய மருங்கோடு, கடுநெறி பாழாக மன்னிய (1-9) எனமாற்றி வினைமுடிபு கொள்க.

உரும் உழற்பு இரங்கும் முரசின் = இடியோசையோடு மாறுபட்டு முழங்கும் போர் முரசொடு. பெருமலைவரை இழி அருவியின் பெரிய மலைகளைச் சேர்ந்த பக்க மலைகளிலிருந்து உருண்டோடி வரும் அருவிகள்போல், ஒளிறு கொடி நுடங்க = ஒளிவீசும் வெண்துகிற் கொடிகள் அசையுமாறு. கடும்பரி = இயல்பாகவே விரைந்தோடவல்ல குதிரைகள், கதழ்சிறகு அகைப்ப = விரைந்து பறக்கும் சி ற கு க ள் கொண்ட புள்ளினங்கள் பறந்து ஒடுமாறு. நீ நெடுந்தேர் ஒட்டிய பிறர் அகன்தலைநாடு = நீ நின் நெடிய பெரிய தேரை செலுத்தின பகைவரின் பரந்தகன்ற பெரிய நாட்டில், மாஆடிய புலம் நாஞ்சில் ஆடா = உன் குதிரைப் படைசென்று போரிட்ட கொல்லைகள், கலப்பைகள் தொழில் புரியலாகாக் கரம்பைகளாய் மாறிப்பயன் இழந்தன. கடாஅம் சென்னிய = மதம் சொரியும் மத்தகமும். கடுங்கண் = கருத்த பார்வையும் உடைய, இனம் பரந்தபுலம் = யானைக் கூட்டம் புகுந்த வயல்கள். வளம் பயப்பு அறியா = மீண்டும் வளம்தருதலை அறியாவாறு அழிந்து வன்னிலங்களாகிவிட்டன. நின்படைஞர் சேர்ந்த மன்றம் = உன் காலாட்படையினர் புகுந்து போரிட்ட பேரூர்ப் பொதுவிடங்கள். கழுதை போகி ஊ கழுதை ஏர் உழுது பாழுற்றுப் போக, நீ உடன்றேர் மன் எயில்= நீ சினந்து படைதொடுத்த நின் பகைவர்க்குரிய நிலைபெற்ற அரண்கள். தோட்டி ைவயா - தாழ் இட்டு அடைக்கவேண்டாதவாறு அழிவுற்றுப் போயின. பசும்பிசிர் ஒள் அழல் செந்நெருப்புப் பொறிகள் சிதறும், ஒள்ளிய நிறம்

73

73

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அடுநெய்_ஆவுதி.pdf/83&oldid=1293715" இலிருந்து மீள்விக்கப்பட்டது