பக்கம்:அடுநெய் ஆவுதி.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாய்ந்த கடுங்கால் ஒற்றலின் = கொடிய குருவளி சுழன்று வீசுவதால். சுடர் சிறந்து = சுடர்விட்டு எழுந்து.உருத்து= கொடுமை மிகுந்து. ஆடிய மரங்கள்=பரந்த இடங்களொடு, ஆண்டலை வழங்கும் = காட்டுக்கோழிகள் திரியும். கான் உணங்கு கடுநெறி = காடுகள் தீய்ந்துபோன கொடிய காட்டு வழிகளும். முனை அகன் பெறும் பாழாக = ஆறலை கள்வர்வாழும், பரந்த பெரிய பாழிடங்களாகுமாறு. மன்னிய

= நிலைத்த அழிவுடையவாயின.

ஆடக் கூடாத மா له قبايلي . ஆடவேண்டிய நாஞ்சில் ஆடாதுபோன கொடுமையைக் கூறும் நிலையிலும், 'மா ஆடிய', 'நாஞ்சில் ஆடா என முரண் தொடர் அமைத்துச் செய்யுள் நயம்கொட்ட யாத்திருக்கும் பாலைக் கெளதமஞரின் புலமை நலம் பாராட்டற்குரியது.

தேரில் கட்டப் பெற்றுப் பறக்கும் வெண்துகில் கொடிக்கு, நெடியமலை முகட்டிலிருந்து வெண் நுரை தெறிக்கப் பாயும் நீர் வீழ்ச்சியை உவமை கூறுமுகத்தான்், அக்கொடி பறக்கும் தேரின் மலைநிகர் நெடிய வடிவை நினைவு படுத்தும் புலவரின் ஆழ்ந்த புலமை நலத்தில் நாமும் ஆழ்ந்து போவோமாக,

வெற்றி கொண்ட நாட்டின் நிலைத்தைக் கழுதை பூட்டிய ஏர் கொண்டு உழுது, .ெ வ ள் ளை வரகும் கொள்ளும் விளைத்தலை வெற்றியின் சின்னமாகக் கொள்வது மரபாக இருந்து வந்துளது. கடுந்தேர் குழித்த ஞெள்ளல் ஆங்கண், வெள்வாய்க் கழுதைப் புல்லினம் பூட்டிப் பாழ்செய்தனே' (புறம்: 15:1-3) வெள்வாய்க் கழுதைப் புல்லினம் பூட்டி, வெள்ளை வாகும் கொள்ளும் வித்து’’ (புறம்: 392; 9-10)

"வடதிசை மன்னர் மன்னெயில் முருக்கிக் கவடி

வித்திய கழுதை ஏர் உழவன்' (சிலம்பு; 27; 225-226) என்ற தொடர்களைக் காண்க.

74

74

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அடுநெய்_ஆவுதி.pdf/84&oldid=1293716" இலிருந்து மீள்விக்கப்பட்டது