பக்கம்:அடுநெய் ஆவுதி.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சின்னம் சிறு இலைகளும் பெரிய பெரிய முட்களும் மண்டி, மாவும் மாக்களும் கால் ஊன்றிச் செல்லாதவாறு கொடுமை செய்யும் நெருஞ்சிப் புதர் படர்ந்த வழியை, மாவும் மாக்களும் வழிகண்டு செல்லமாட்டாது தளிரும் தழையும் மண்டிக் கொடுமை செய்யும் காட்டு வழியாக உருவகம் செய்யப்பெற்ற சொல்லை அடையாக ஏற்ற, காடுறு கடுநெறி என்ற இனிய தொடர் வழங்கப் பெற்றமையால், இப்பாட்டிற்கு அத்தொடரையே பெயராகச் சூட்டிப் பெருமை செய்து உள்ளார்கள் தொல்பொருள் நல்லோர்.

26. தேஏர் பரந்த புலம் ஏளர் பரவா;

களிறு ஆடிய புலம் நாஞ்சில் ஆடா! மத்து உரறியமனை இன்னியம் இமிழார்; ஆங்குப், பண்டு நற்கு அறியுநர் கெழுவளம் நினைப்பின்,

5 நோகோயானே! நோதக வருமே!

பெயன்மழை புரவு இன்ருகி வெய்துற்று வலம் இன்று அம்ம! காலையது பண்பு” எனக் கண்பனி மலிந்நிறை தாங்கிக் கைபுடையூ மெலிவுடை நெஞ்சினர் சிறுமை கூரப்,

10 பீர் இவர் வேலிப் பாழ்மனை, நெருஞ்சிக்

காடுறு கடுநெறியாக மன்னிய; முருகு உடன்று கறுத்த கலிஅழி மூதூர் உரும்பில் கற்றத்து அன்ன நின் திருந்து தொழில் வயவர் சீறிய நாடே'.

துறை : இயண்மொழி வாழ்த்து வண்ணம் : ஒழுகு வண்ணம் தூக்கு : செந்தூக்கு பெயர் : காடுறு கடுநெறி

78

78

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அடுநெய்_ஆவுதி.pdf/88&oldid=1293721" இலிருந்து மீள்விக்கப்பட்டது