பக்கம்:அடுநெய் ஆவுதி.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூதூர் கூற்றத்தன்ன வயவர் சிறியநாடு (12-14). காலையது பண்பு வலம் இன்று அம்ம எனக் கைபுடையூ, நெஞ்சினர் சிறுமை கூர, மாலையாகவும், நெறியாகவும் மன்னிய (6-11), அறியுநர் வளம் நினைப்பின் நோதகவரும்; யான் நோகு (1-5) எனமாற்றி வினைமுடிவு கொள்க.

முருகு உடன்று கறுத்து கலி அழி மூதூர் = முருகவேள் சினம் கொண்டு செருமேற்கொண்டு சென்றதினால் தம் செல்வக்களிப்பிழந்து போன மூதூர்களில் தன் அழிவுத்தொழிலின் ஆற்றல் காட்டி நின்ற, உரும்பில் கூற்றத்து அன்ன = பிறரால் அ ழி க்க லா கா ஆற்றல் வாய்ந்த கூற்றுவனை ஒத்த, நின் திருந்து தொழில் வயவர் = அறப். போர் புரியும் இயல்பினரான உன் படைவீரர். சீரிய நாடு = சினங்கொண்டு புகுந்த நாடுகள் பெயல் மழை = காலம் தவருது பெய்யும் இயல்புடைய மழை. புரவு இன்ருகி = பெய்யாமல் பொய்த்தமையால், வெய்துற்று = .ெ வ ப் பம் மிகுந்து வலம் இன்று - வளம் இல்லாமல் போய்விட்டது. காலையது பண்பு = இது நம் அல்லற்காலத்தின் இயல்பு போலும். என = என்று எண்ணி. கண்பனிமலிந் நிறை தாங்கி = கண்களில், குளிர்ந்து நி ைற ந் த கண்ணிர்த் துளிகளைத் தாங்கி, மெலிவுடை நெஞ்சினர் = உள்ளூரம் இழந்துபோன அந்நாட்டு மக்கள், கைபுடையூ - செயல் அற்று, அதுகாட்டும் வகையில் கைபிசைந்து. சிறுமை கூர = வருந்திக் சீர் அழிந்து போகுமாறு. பீர்இவர் வேலிப் பாழ்மனை = பீர்க்குப் படர்ந்த வேலைகளையே கொண்ட பாழ்மனைகளை உடையவராகவும். நெருஞ்சிக் காடு உறு கடுநெறி யாக= நெருஞ்சிப்புதர்கள் காடுபோல் படர்ந்த கொடிய வழி களேஉடையவாகவும், மன்னிய=நிலைத்த அழிவுடையவாகி. விட்டன. ஆங்கு = இவ்வாறு அழிவுற்றுப் போன அந்நாடு களில். தேனர் பரந்த புலம் ஏளர் பரவா. க பண்டு, செல்வர்

79

79

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அடுநெய்_ஆவுதி.pdf/89&oldid=1293722" இலிருந்து மீள்விக்கப்பட்டது