பக்கம்:அடுநெய் ஆவுதி.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேழிசை கேட்க மகிழ்வது இல்லை, - "மத்து உரறிய மனே இன்னியம் இமிழா'-எனக் கூறிய திறம், பாராட்டிற்கு உரியது. - -

சென்ற பாட்டில் 'மா ஆடிய புலம் நாஞ்சில் ஆடா; யானே இனம் பரந்தபுலம் வளம் பரப்பு அறியா’ என்றும்; இந்தப் பாட்டில், 'தே ஏர் பரந்தபுலம் ஏளர் பரவர், களிறு ஆடிய புலம் நாஞ்சில் ஆடா' என்றும் முரண்தொடர் அமையப் பாடியிருந்தாலும், முரண்பாட்டு நி லே ைம ஏற்படுவதற்காம் காரணம், இரண்டிலும் ஒன்று அன்று. சென்ற பாட்டில், நாஞ்சில் ஆடவேண்டாவாறு அழிவு செய்து விட்டது மா ஆடல்; வளம்பார்க்க இயலாவாறு அழிவு செய்து விட்டது யானைப் படைப் பரப்பு என்று கூறிய நிலையையும், இந்தப் பாட்டில், நன்செய் நிலங்களை ஏர்கொண்டு உழ வேண்டாவாறு, நன்கு உழுது சேறுக்கி, உறுதுணை புரிந்து விட்டது தேர் ஓட்டம். புன்செய் நிலங்களை நாஞ்சில் கொண்டு ஊழவேண்டாவாறு, உழுது விழுதாக்கி உறுதுணை செய்து விட்டன. கோரைக்கிழங்கு தேடி மண்ணைக் கிளறும் பன்றிகள் என்று கூறிய நிலையையும் காண்க. முன்னதில் காட்டிய காரணம் அழிவை அடிப்படையாகக் கொண்டது. இதில் காட்டிய காரணம் ஆக்கத்தை அடிப்படையாகக் கொண்டது. ஆக, இரு செய்யுள்களிலும், முரண்தொடர் இடம்பெறப் பாடியது மட்டுமல்லாமல், இரு செய்யுள்களிலும் காரணம் முரண்படப் பாடியிருக்கும் புலமை போற்றிப் பாராட்டற்கு உரியது.

81

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அடுநெய்_ஆவுதி.pdf/91&oldid=1293725" இலிருந்து மீள்விக்கப்பட்டது