பக்கம்:அடுநெய் ஆவுதி.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எடுத்துக் கூறினல், இத்துணைச் சிறப்புற்ற நாடு சீரழிந்து போவதா? அத்துணைச் சீர்கேட்டிற்கும் நானே காரணமாவதா?’ என்று எண்ணிப், படையெடுப்பு நிகழ்ச்சியை ஒருவேளை கைவிடுதலும் கூடும் என்ற நம்பிக்கை எழவே, ஆருச் சினம் மிக்கு நிற்கும் அரசனை அணுகிக் கீழ்வருமாறு கூறலுற்ருர், -

'வேந்தே! சினம் மிக்க உன்நோக்கு சென்று விட்டது அந்நாட்டில். ஆகவே, அந்நாட்டின் நலம் அனைத்தும் இன்றே அழிவுற்றுப் போயின. அதில் சிறிதும் ஐயம் இல்லை. அரசே! அவ்வாறு அழிவுறப்போகும் அந்நாட்டின் பண்டைய பெருமையை நீ பார்த்தனையோ? யான் பார்த்திருக்கின்றேன் பன்முறை; கூறுகின்றேன் கேள்; வளம் பெருக வாழ்ந்து, அமைதி நிலவும் நல்லாட்சி நடைபெறும் நாட்டில் மட்டுமே, இசை முதலாம் நுண்கலைகள் நன்கு வளர்ந்திருக்கும் என்ப. உன் பகையை இன்று தேடிக்கொண்ட அந்நாட்டில், இசையை இனிமையுற இசைக்கவல்ல எண்ணிலா இசைவாணர் வாழ்கின்றனர். தொடுத்த மலர் வாடி உதிர்ந்ததும், அதனிடத்தில் புதுப்பூ இட்டுத் தொடுத்து, அவ்வினமலரே ஆங்குத் தொடர்ந்து இடம் பெறும் வகையில் குவளை மலர்களைக் கலந்து அவற்றின் இடையிடையே அன்றலரும் ஆம்பற் பூக்களைத் தொடுத்த தழையுடை உடுத்து, சுருண்டு சுருண்டு கடை குழன்று அழகு செய்யும் தனமயிரில், பல்வகைப் பூச்களும் கலந்து க ட் டி ய கண்ணி குடி, வடித்தெடுத்த கள்ளுண்டு களித்த, ஏழிசைகளையும் எழுப்பித் தாமும் இன்புற்று, பிற ைர யும் இன்புறுத்துவர். அந்நாட்டு இசைவாணர். அந்நாட்டில் இசைவாணர் மட்டுமே இசையில் வல்லவர் என்பது இல்லை. அவ்விசைவாணர்களின் குடியிருப்பு களுக்கு அணித்தாகவுள்ள வயல்களில்,இரைத் தேடித் திரியும், தம் தொழிலால் இட்ட பயிர்களை அழித்துவிட்டு, அணித்தாக

83

83

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அடுநெய்_ஆவுதி.pdf/93&oldid=1293728" இலிருந்து மீள்விக்கப்பட்டது