பக்கம்:அடுநெய் ஆவுதி.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருக்கும் மருத மரங்களில் சென்று அமரும் பறவைக் கூட்டத்தை, அம்மரங்கள் மீதே ஏறி ஒட்டும் மகளிர் எழுப்பும் ஒலியும், ஏழிசைபோலும் இனிமையே தருவதால், அக்குரலொலி கேட்கும் ஆங்கு வாழ் மயில்கள், அஞ்சி அகன்று ஓடிவிடுவது செய்யாது. அக்குரலை இசைவாணர் எழுப்பும் இசையொலியாகவே எண்ணி மகிழ்ந்து, : அம்மகிழ்ச்சி மிகுதியால் தம் தோகை வி ரி த் து க் களித்து ஆடத் தொடங்கிவிடும்.

'மன்னவ! ஏழிசை வளர்க்கும் பண்பாடுமிக்க அந்நாட்டின் வளப்பெருமையையும் சிறிது கூறுகிறேன்; கேட்பாயாக! நீர் தேங்கிக் கிடக்கும் நெடிய குளக்கரையில், நீர் போக அமைத்திருக்கும் ம த கு க ளி ல், நாட்டு ஆடவர் மகளிர் அனைவரும் ஏழி இசை இசைக்கவல்லளர். இட்டு அடைத்திருக்கும் ஆதலின் வழியாகக் கசிந்து வெளிப்படும் நீர் பாய்ந்தே வளம் பெருக்கும் வயல்களெல்லாம் அத்தகு நீர் வளம்மிக்க அவ்வயல்களில் நெய் த ல் , தேனிக்கூட்டம், திரண்டு வந்துசேருமாறு தேன் துளிக்களும் மலர்கள் மலர்ந்து மணம் நாறும். அவ்வயல்களின் இடையிடையே அமைந்திருக்கும் வழிகளின் ஊடே ஊர்ந்து செல்லும் வண்டிகளின் உரம்மிக்க உருளிகள், வயல் சேற்றில் விழ்ந்து ஆழப்புதைந்து போவுழி, வண்டியை ஈர்த்துச் செல்லும் நல்லெருதுகளுக்கு உரமும் ஊக்கமும் ஊட்டுவான்வேண்டு, வண்டியோட்டிகள் எழுப்பும் ஆரவாரப் பேரொலிக் கேட்டிருப்பரே அல்லது, அந்நாட்டுமக்கள், பகைவர் எழுப்பும் போர் ஆரவாரப் பூசலை இன்று வரையும் கேட்டது இல்லை. அத்துணவளம் மிக்கது அந்நாடு. புதுப்புது வருவாய்களைத் தந்து பெருங்கவின் பெற்றது அந்நாடு. அந்த நாடு இன்று அழிந்துவிட்டது, உன் ஆற்ருெளுச் சினத்தில்ை', ' : . . . .

84

84

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அடுநெய்_ஆவுதி.pdf/94&oldid=1293730" இலிருந்து மீள்விக்கப்பட்டது