பக்கம்:அடுநெய் ஆவுதி.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இவ்வாறு, அவன் சினத்தீயின் சிறப்பு உரைப்பார் போல், அது, எந்நாட்டின் எத்தகைய பெருநலனை அழிக்கப் போகிறது என்பதை எடுத்துக் காட்டும் முகத்தான்் தாம் கருதிய கருமத்தை ஒருவாறு நிறைவேற்றினர் புலவர்.

இப்பாட்டில், தொடுப்போர் தொடர்ந்து தொடுப்பதால் இடையற்றுப் போகாமல் இருந்து காட்சி நல்கும் குவளை மலரைத் தொடுப்போர் வினை, தொடரவறாமல், தொடுக்கப்படும் குவளையினைத் .ெ த ர ட ர் ந் த கு வ ளை என்று கூறியுள்ள நயம் கண்டு, அத்தொடரால் பெயர் சூட்டி யுள்ளார்கள், செய்யுள் நலம் காணும் நல்லோர்கள்.

27. சிதைந்தது மன்ற, நீ சிவந்தனை நோக்கலின் தொடர்ந்த குவளைத் தூநெறி அடைச்சி அலர்ந்த ஆம்பல் அகமடிவையர், சுரியலம் சென்னிப், பூஞ்செய் கண்ணி, 5 அரியல் ஆர்கையர், இனிது கூடு இயங்க,

துறைநணி மருதம் ஏறித் தெறுமார் எல்வளை மகளிர் தெள்விளி இசைப்பின் பழனக் காவில் பசுமயில் ஆலும், பொய்கை வாயில் புனல்பொரு புதவின் 10 நெய்தல் மரபின் நிரைகள் செறுவின்

வல்வாய் உருளி கதுமென மண்ட அள்ளல் பட்டுத் துள்ளுபு துரப்ப நல்எருது முயலும் அளறுபோகு விழுமத்து சாகாட்டாளர் கம்பலை அல்லது 15. பூசல் அறியா நன்னட்டு

யாணர் அறு அக் காமறு கவினே.”

85

85

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அடுநெய்_ஆவுதி.pdf/95&oldid=1293731" இலிருந்து மீள்விக்கப்பட்டது