பக்கம்:அடுநெய் ஆவுதி.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. உருத்துவரு மலிர்கிறை

பல்யானைச் செல்கெழுகுட்டுவனின் பாராளும் பெருநெறியை நேரிற் காணவிரும்பிய புலவர் பாலைக் கெளதமனர், சேரநாட்டின் சிற்றுார் பேரூர்களையெல்லாம் சுற்றிப் பார்த்து வரப் புறப்பட்டார். அவ்வாறு அவர் புறப்பட்ட காலம், கொடிய கோடைகாலம். மாரிக்காலத்தில் உண்ட மழை நீரைக் கோடைக்காலத்தில் அருவிகள் வாயிலாக உமிழும் இயல்புடைய பெருமலைகள் மலிந்தது அவன்நாடு. உயர்ச்சி மிகுதியால் குளிர்ந்து மழைநீர் மிகுதியால் மரங்களும் செடிகளும் மலிந்து மாண்புற்றுத் திகழும் அம்மலைகளும், அருவிகள் வறண்டு வெடித்துப் பொ டி பட் டு ப் பொலிவிழந்து போகுமாறு வெப்பத்தை வாரிக்கொட்டும் கொடுமை மிக்கது அக்கோடை.

கோடையின் கொடுமை தாங்கமாட்டாது தளர்ந்த நிலையில் சேரநாட்டுள் புகுந்த பு ல வ ைர வரவேற்றது பேரியாறு. சேரனுட்டிற்குக் காவிரி போலவும், பாண்டி நாட்டிற்கு வையை பொருநை போலவும், சேரநாட்டிற்கு வளங்கொழிப்பது பேரியாறு. அது, அக்கோடையிலும் இருகரை புரண்டோடிக் கொண்டிருந்தது. சேரநாட்டவர் சிறந்த அ றி வு ைட ய வ ர். உழவின் சிறப்பறிந்தவர். உழைப்பின் பெருமை அறிந்தவர். அவர்கள், கோடையிலும் பெருக்கெடுத்தோடும் பேரியாற்றுத் தண்ணீர் பயனற்றுப் போக விடுவரோ? சிறியவும் பெரியவுமாய வாய்க்கால்களை வரம்பின்றி வெட்டி வைத்திருந்தனர். அவ்வாய்க்கால் வழியே புகுந்தோடிய பேரியாற்றுநீர், நீர் ஏறிப் பாயமாட்டா மேட்டுநிலம், ஆகவே ஆடும் மாடும் மேய்வதற்காம் மேய்

89

89

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அடுநெய்_ஆவுதி.pdf/99&oldid=1293735" இலிருந்து மீள்விக்கப்பட்டது