பக்கம்:அட்லாண்டிக் பெருங்கடல்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



1. அமைப்பு

இருப்பிடம்

அட்லாண்டிக் பெருங்கடல், ஒரு பக்கம் ஐரோப்பா ஆப்பிரிக்கா ஆகிய கண்டங்களுக்கு இடையேயும்; மற்றொரு பக்கம் அமெரிக்காவிற்கு இடையேயும் அமைந்துள்ளது. ஆர்க்டிக் கடலில் இருந்து அண்டார்க்டிக் கடல்வரை பரவியுள்ளது.

பரப்பு

இது பசிபிக் பெருங்கடலில் பாதியளவு உள்ளது. இதன் பரப்பு 3½ கோடி சதுர மைல். இது Ѕ போன்ற வடிவமுள்ளது. இதன் ஆழம் 3 மைல்.

இதற்கு நீண்ட கடற்கரை உண்டு. இதன் நீளம் 55,000 மைல். இகன் கரைகள் நன்கு ஆராயப்பட்டவை; கலங்கரை விளக்கங்கள் நிரம்பப் பெற்றவை.

படிவுகள்

இதன் அடியில் சாம்பல் நிறமுள்ள படிவுகள் உள்ளன. சிவப்புக் களிமண்ணும் சில இடங்களில் காணப்படுகின்றது. குழைவான சேறும் உண்டு.1-599