பக்கம்:அட்லாண்டிக் பெருங்கடல்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

3

தீவுகள்

இதன் இரு பக்கங்களிலும் தீவுகள் நிறைய உள்ளன. குறிப்பாக, அவை மேற்கே அதிகம். பவழத் தீவுகளும் உண்டு.

வெப்ப நிலை

நில நடுக்கோடு இதை வட, தென் அட்லாண்டிக் என இரு கடல்களாகப் பிரிக்கிறது. தென் அட்லாண்டிக், வட அட்லாண்டிக்கைவிடக் குளிர்ந்தது.

கடலின் அடியில் வெப்பநிலை உறைநிலையை நெருங்கும். வெப்பப் பகுதிகளில் மேற்பரப்பு வெப்பநிலை 80°F. குளிர்ப் பகுதிகளில் வெப்பநிலை 28°F.

உப்பு

இதன் நீர் உப்பு மிகுந்தது. வாணிபக் காற்றுள்ள பகுதிகளில் உப்பு அதிகம். நடுக் கோட்டுப் பகுதிகளில் உப்பு குறைவு. மேற்பரப்பிற்குக் கீழ் உப்புத் தன்மை அதிகரிக்கிறது. உப்பின் அளவு 3-4 பங்கு வரை உள்ளது. இதன் நீரின் ஒப்படர்த்தி 1:02.

ஆறுகள்

பெரும் ஆறுகள் இதில் கலக்கின்றன. மற்றப் பெருங்கடல்களைக் காட்டிலும் இதில் ஆற்று நீர் அதிகம் கலக்கிறது.

இது பழைய உலகத்தையும் கிழக்குக் கண்டம்) புதிய உலகத்தையும் மேற்குக் கண்டம்) இணைக்