பக்கம்:அட்லாண்டிக் பெருங்கடல்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

4

க்கிறது. உலகின் இரு அரைப் பகுதிகளிலும் உள்ள எல்லாப் பெரும் பள்ளத்தாக்குகளும் இப்பெருங் கடல் நோக்கிச் சாய்ந்துள்ளன.

குடாக்கள்

இதற்குப் பெரிய விரிகுடாக்களும் வளைகுடாக்களும் உண்டு. மற்றும், உள்நாட்டுக் கடல்களும் நீரோட்டங்களும் உண்டு. உலகம் முழுதிற்கும் இது மையத் தரைக் கடலாக உள்ளது.

இதன் ஆற்று வடிநிலம் (river basin) உலகிலேயே மிகப் பெரியது. இதன் நீரோட்டங்களும் மற்ற எந்தக் கடலின் நீரோட்டங்களைக் காட்டிலும் நன்கு அறியப்பட்டுள்ளன.

நீரோட்டங்கள்

வட அட்லாண்டிக்கில் முக்கிய நீரோட்டங்கள் உள்ளன. அவையாவன : நடுக்கோட்டு நீரோட்டம் கல்ப் நீரோட்டம், வட ஆப்பிரிக்க நீரோட்டம். இம்மூன்றும் நீர்ச் சுழி போல் பெரிய சுழல் இயக்கத்தை உண்டாக்குகின்றன. இதற்கு நடுவில் சார்கோசா கடல் உள்ளது.

கல்ப் நீரோட்டம் வெப்ப நீர்களை வடக்கேயும் கிழக்கேயும் இழுத்துச் சென்று, வடமேற்கு ஐரோப்பாவைக் கதகதப்பாக்குகிறது.

தென் அட்லாண்டிக்கில் தென் நடுக்கோட்டு நீரோட்டம், பிரேசில் நீரோட்டம், தென் இணைப்பு நீரோட்டம், தென் ஆப்பிரிக்க நீரோட்டம் ஆகியவை