பக்கம்:அட்லாண்டிக் பெருங்கடல்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

5

உள்ளன. இந்நான்கும் சுழல் இயக்கத்தை உடையவை. இதற்கு நடுவில் சிறிய சார்கோசா கடல் உள்ளது.

தவிர, லாப்ரடார் நீரோட்டம் ஆர்க்டிக் கடலில் இருந்து தெற்கு நோக்கி நகர்ந்து கிழக்குக் கனடா, புதிய இங்கிலாந்து ஆகிய நாடுகளைக் குளிர வைக்கிறது. இது இடர்மிகு மூடுபனிகளையும், பனிப்பாறைகளையும் அட்லாண்டிக்கின் போக்கு வரவு வழிகளில் கொண்டு வருகிறது.

வாணிபக் காற்றுகள்

இவை கடல் நீரோட்டங்களின் போக்கை உறுதி செய்கின்றன. வட, தென் அட்லாண்டிக்கின் நடுப்பகுதியில் அழுத்தம் அதிகமுள்ளது. இவை இப்பகுதியில் உண்டாகின்றன.

தென்கிழக்கு வடகிழக்கு வாணிபக் காற்றுகள் வெப்ப நடுக்கோட்டு நீரோட்டத்தை உண்டாக்குகின்றன. இந்த ஓட்டம் தெற்கே பிரேசில் நீரோட்டமாக மாறுகிறது; வடக்கே கல்ப் நீரோட்டமாக உருவாகிறது. கல்ப் நீரோட்டம் வடமேற்கு ஐரோப்பாவின் தட்பவெப்ப நிலையை உருவாக்குவதில் செல்வாக்குப் பெறுகின்றது.

கனிவளம்

இதில் மக்னீசியம் உப்புக்கள், நிலக்கரி, எண்ணெய் முதலியவை கிடைக்கின்றன.