பக்கம்:அட்லாண்டிக் பெருங்கடல்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



2. உள்நாட்டுக் கடல்கள்


ட்லாண்டிக் கடலுக்குப் பல பெரிய உள் நாட்டுக் கடல்கள் அதன் இரு கரைகளிலும் உள்ளன. இதனால் மற்றக் கடல்களில் இருந்து குறிப்பிடத் தகுந்த அளவுக்கு இது வேறுபடுகிறது. அதன் கிழக்கேயும் மேற்கேயும் உள்ள உள் நாட்டுக் கடல்கள் யாவை?

கிழக்கு

அதன் கிழக்கே வடகடல், பால்டிக்கடல், மையத் தரைக்கடல் ஆகியவை உள்ளன. இவை அதன் துணைக் கடல்களே. இவற்றில் மையத் தரைக்கடல் மார்மோரா கடல், கருங்கடல், ஆசோவ் கடல் ஆகியவற்றோடு தொடர்பு கொள்கிறது.

வடகடல்

இதற்கு ஜெர்மன் பெருங்கடல் என்னும் பெயரும் உண்டு. இது அதன் மூன்று பக்கங்களில் டியூடானிக் நாடுகளால் சூழப்பட்டுள்ளது. ஐரோப்பா கண்டம், கிரேட் பிரிட்டன் ஆகிய இரண்டிற்குமிடையே இது மிக ஆழமற்றது. இதில் நீர்மூழ்குச் சமவெளி உள்ளது. இச்சமவெளியின் வெளிவரும் பகுதிகளே பிரிட்டிஷ் தீவுகள் ஆகும்.

இதன் முக்கால் பகுதி மணல் கரைகளால் ஆனது. இது ஆழமற்றதாக இருப்பதால், மிக விரைவாகப் புயல்கள் எழும், விழும். இதன் நீர்