பக்கம்:அட்லாண்டிக் பெருங்கடல்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



3. வரலாறு


பல நூற்றாண்டுகள் அட்லாண்டிக், அமெரிக்காவை ஐரோப்பாவிலிருந்து பிரித்து வைத்தது. அட்லாண்டிக் உலகின் கடைக் கோடி என்றும் கருதப்பட்டது.

அட்லாண்டிக் கடலை முதன் முதலில் கடந்து அமெரிக்காவைக் கண்டுபிடித்தவர் கொலம்பசே ஆவார். இவர் தம் தீரமிகு பயணத்தை 1492 இல் மேற்கொண்டார். இவர் பயணம் அட்லாண்டிக்கைக் கடப்பதற்கும் அதில் வாணிபம் தொடங்குவதற்கும் வழிவகை செய்தது.

இன்று அட்லாண்டிக்கில் சிறிய கப்பல்களிலிருந்து பெரிய கப்பல்கள் வரை சென்ற வண்ணம் உள்ளன. அது உலகின் சிறந்த வாணிப வழியாகத் திகழ்கின்றது. பெரிய வான் ஊர்திகளும் அதைக் கடந்த வண்ணம் உள்ளன. செய்திப் போக்குவரத்தும் அதன் வழியாக வானொலி, கடல் தந்திகள் ஆகியவற்றின் மூலம் நடைபெறுகின்றது.

கப்பல்

கப்பல்களைப் பொறுத்த வரை கொலம்பஸ் சென்ற சாதாரண கப்பலே முதன் முதலாக அட்லாண்டிக் பெருங்கடலைக் கடந்தது. இவர் 1492 இல் 70 நாட்கள் பயணம் செய்து கெளனாகனி என்னுமிடத்தை அடைந்தார்.