பக்கம்:அட்லாண்டிக் பெருங்கடல்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

நீராவிப்படகு முதன் முதலாக 1838 இல் 19 நாட்களில் அட்லாண்டிக்கைக் கடந்தது.

1938 இல் குயின் மேரி என்னுங்கப்பல் அட்லாண்டிக்கை விரைவாகக் கடந்தது. அவ்வாறு அது கடப்பதற்கு 3 நாட்கள் ஆயிற்று. இதற்குப் பின் பல கப்பல்கள் விரைவாகக் கடந்தன. இன்று வாணிபக் கப்பல்களும் மற்றக் கப்பல்களும் அதைக் கடந்த வண்ணம் உள்ளன.

வான் ஊர்தி

முதல் உலகப் போருக்குப் பின் வான் ஊர்திகள் மூலம் அட்லாண்டிக்கைக் கடக்க, பல முயற்சிகள் செய்யப்பட்டன. அவற்றில் சில பயணங்கள் வெற்றியுடன் நடைபெற்றன. பல பயணங்கள் தோல்வியுற்று, விமானிகளும் இறக்க நேர்ந்தது.

அட்லாண்டிக்கைக் கடக்கும் முதல் பயணம் அமெரிக்கக் கடற்படை விமானம் மூலம் 1919 இல் நடைபெற்றது. விமானம் நியூபவுண்ட்லாந்தை விட்டுக் கிளம்பி, பிளைமவுத்தை அடைந்தது. அசோர்ஸ் என்னுமிடத்தில் இறங்கி எண்ணெய் நிரப்பிக்கொண்டது. பயணத்திற்கு 12 நாட்கள் ஆயிற்று.

இதற்கிடையில் டெய்லி மெயில் என்னும் இதழ் 10,000 பவுன் பெறுமானமுள்ள பரிசுத் திட்டத்தை ஏற்படுத்தியது. அட்லாண்டிக்கைக் கடக்கும் பயணத்தை ஊக்கவே இத்திட்டம் உருவாயிற்று.