பக்கம்:அட்லாண்டிக் பெருங்கடல்.pdf/25

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

15


 குழுவினர் 11 பேரும், பயணிகள் 10 பேரும் இருந்தனர். பயணத் தொலைவு 2,448 மைல். பயண நேரம் 17மணி அளவை செய்ய, பயணம் மேற்கொள்ளப்பட்டது.

1945 இல் பறக்கும் விரைவும் அதிகமாயிற்று. உளவு பார்க்கும் விமானம் ஒன்று 1 மணிக்கு 330 மைல் விரைவில் 2,300 மைல்களைக் கடந்தது. பயணத்திற்கு 7 மணி ஆயிற்று. இன்று பல விமானங்கள் அட்லாண்டிக்கைக் கடந்த வண்ணம் உள்ளன. ஆக, கப்பல், விமானம் ஆகிய இரு வகைக் கலங்களும் அட்லாண்டிக்கைக் கடந்த வண்ணம் உள்ளன. குறிப்பாக, அஞ்சல் விமானங்களும் பயணி விமானங்களும், அட்லாண்டிக்கைக் கடந்து சென்ற வண்ணம் உள்ளன.