பக்கம்:அட்லாண்டிக் பெருங்கடல்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

17

 கிற்று. வாணிபக் கப்பல்கள் அதிகம் அழிந்தன. ஜெர்மன் கப்பல் ஒன்றுகூட அழியவில்லை.

மூன்றாம் நிலை: இது 1941- ஆம் ஆண்டு வரை நீடித்தது. இப்பொழுது ஜெர்மன் கப்பல்களும் மூழ்கின.

நான்காம் நிலை: இது 1942 ஜனவரி முதல் ஜூலை வரை நீடித்தது. இப்பொழுது அமெரிக்கா போரில் கலந்து கொண்டது. எதிர்ப்பு நாடுகளுக்குக் கப்பல் அழிவுகள் அதிகம் ஏற்பட்டன.

ஐந்தாம் நிலை: இது 1942 ஆகஸ்டு முதல் 1943 மே வரை நீடித்தது. எதிர்ப்பு நாடுகளுக்குக் கப்பல் அழிவுகள் ஏற்பட்டன. ஜெர்மன் கப்பல்கள் அதிகம் அழிந்தன. இப்பொழுது எதிர்ப்பு நாடுகளுக்குச் சாதக நிலை உருவாயிற்று.

ஆறாம் நிலை: இது 1943 ஜூன் முதல் ஆகஸ்டு வரை நீடித்தது. பாதுகாப்புக் கலங்கள் அதிகம் பயன்பட்டன. எதிர்ப்பு நாடுகளின் கப்பல்கள் மூழ்குவது குறையத் தொடங்கிற்று. பகைவர்களின் கப்பல்கள் மிகக் கடுமையாக அழிக்கப்பட்டன. இந்நிலையில்தான் திருப்பம் ஏற்பட்டது. ஜெர்மன் நீர் மூழ்கிக் கப்பல்கள் மூழ்கின. தோல்வியின் சாயல் ஜெர்மானியரின் மீது விழத் தொடங்கியது.

ஏழாம் நிலை : இதில் இத்தாலி சரண் புகுந்தது. மையத் தரைக்கடல் வழி மீண்டும் திறக்கப்பட்டது.

1.A-599