பக்கம்:அட்லாண்டிக் பெருங்கடல்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

எல்லா நாடுகளும், ஒத்த நிலையில், தங்கள் பொருள் வளத்திற்குரிய கச்சாப் பொருள்களைப் பெறுவதற்கும்; வாணிபத்தை நடத்துவதற்குரிய வழிவகைகளை மேற்கொள்ள முயற்சி செய்தல்.

பொருளாதாரத் துறையில் எல்லா நாடுகளுக்கிடையில் நிறைந்த தொடர்பு இருத்தல். இதனால் உழைப்பு நிலை உயரவும், பொருளாதார முன்னேற்றம் ஏற்படவும், சமூகப் பாதுகாப்பு உண்டாகவும் வழியுண்டு.

நாஜி கொடுமை அழிந்தபின் எல்லா நாடுகளில் லும் மக்கள் பாதுகாப்புடன் வாழ்தல்.

தங்கு தடையின்றி எல்லோரும் திரைகடல் ஓடுவது.

விரிந்த, நிலையான சமூகப் பாதுகாப்பை நிறுவும் முயற்சியைத் தள்ளி வைத்தல்; அமைதி கருதிப் போர்க் கருவிகளைக் குறைத்தல் அல்லது படைக் குறைப்பு செய்தல்.

போரில் ஈடுபட்ட பிரிட்டனும், ஈடுபடாத அமெரிக்காவும் இந்த அறிக்கையை விட்டது சிறப்பாகும். அலை ஒத்த உள்ளத்துடன் உலக அமைதியை நாடியது மேலும் சிறப்பாகும்.

அட்லாண்டிக் நகரம்

இது அமெரிக்காவில் நியூஜெர்சே என்னுமிடத்தில் உள்ள நகரம்; கடலுக்கு அருகிலுள்ள சிறந்த தங்குமிடம். இது நீண்ட குறுகிய மணல் தீவில் உள்