பக்கம்:அட்லாண்டிக் பெருங்கடல்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

23

ளது. இதன் கடற்கரை அழகானது. இதில் ஆறு நீண்ட கடல் அலைதாங்கி வளைவுகள் உள்ளன. இதில் உலவும் இடம் எட்டு மைல் நீளமுள்ளது. இதன் மக்கள் தொகை 64,000.

அட்லாண்டிக் படகுப் பணி

இப்பணி அரசர் விமானப்படை போக்குவரவு நிறுவனத்தால் நடத்தப்பட்டது. அமெரிக்காவிலும், கனடாவிலும் கட்டப்பட்ட விமானங்களைப் பிரிட்டனுக்குக் கொண்டுவரத் தொடங்கப்பட்டது.

இரண்டாம் உலகப் போரில் இப்பணி மிகவும் உதவியது. அமைதிக் காலத்தில் பொருள்களையும், மருந்துகளையும் ஐரோப்பாவின் விடுதலை பெற்ற நாடுகளுக்குப் படகுகள் சுமந்து சென்றன. படகுகளில் போர் வீரர்களும் சென்றனர்.

இப்படகுப் பணி எல்லாப் பருவ நிலைகளிலும் நடைபெற்றது. இதனால், விரைவாகவும் நலமாகவும் பாதுகாப்பாகவும் பயணிக் கப்பல்கள் அட்லாண்டிக்கைக் கடந்து செல்வதற்குரிய வாய்ப்புக்கள் உருவாயின. இரண்டாம் உலகப் போருக்குப்பின் இப்பணி மையக் கிழக்கு, இந்தியா, பசிபிக் முதலிய பகுதிகளுக்கும் பரவியது.

நேடோ

வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பின் ஆங்கிலச் சுருக்கமே நேடோ என்பது. இரண்டாம் உலகப் போருக்குப்பின் ஐரோப்பாவில் சோவியத்து