பக்கம்:அட்லாண்டிக் பெருங்கடல்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

உருசியா மட்டுமே வலுவுள்ள அரசாக இருந்தது. போரினால் பிரிட்டன், பிரான்சு ஆகிய நாடுகள் நலிவுற்றன. ஜெர்மனியும் இத்தாலியும் படை இழந்தன.

கிழக்கு ஐரோப்பாவின் சிறிய நாடுகள் உருசியாவின் கட்டுப்பாட்டில் அடங்கி இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஐரோப்பா முழுவதையும் பொதுவுடைமைக்காரர்கள் பிடித்துக் கொள்ளலாம் என்னும் நெருக்கடி ஏற்பட்டது. இந்நிலையில், உருசியத் தாக்குதலைத் தவிர்க்க, குடியரசு நாடுகள் ஒன்று சேர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு தோன்றியது. இதற்குச் சோவியத்து வல்லரசுக்கு இணையான அமெரிக்கா, தலைமை ஏற்க வேண்டிய நிலை உண்டாயிற்று.

1949-ஆம் ஆண்டு ஏப்ரல் 4-இல் வாஷிங்டனில் வட அட்லாண்டிக் ஒப்பந்தம் கையெழுத்தாயிற்று. அவ்வாறு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நாடுகளாவன: அமெரிக்கா, பிரிட்டன், பிரான்சு, கனடா, நெதர்லாந்து, பெல்ஜியம், லக்சம்பர்க், இத்தாலி, நார்வே, டென்மார்க், ஐஸ்லாந்து, போர்ச்சுகல். ஒப்பந்தம் வட அட்லாண்டிக் அமைப்பைத் தோற்றுவித்தது.

இந்த ஒப்பந்தப்படி தாக்குதல் ஏற்பட்டால் ஒரு நாடு மற்றொரு நாட்டுக்கு உதவும். ஒவ்வொரு காடும் தன்னுடைய படைகளைத் தானே நிறுவிக் கொள்ளும். அமெரிக்கா போர்ப்படைச் செலவிற்