பக்கம்:அட்லாண்டிக் பெருங்கடல்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

அட்லாண்டிக்கின் சரக்குக் கப்பல் செல்லும் வழிகள் விரிந்து அமைந்துள்ளன. அவை ஐரோப்பாவிலிருந்து கிழக்கு இந்தியத் தீவுகள், பனாமா, கானரித் தீவுகள் ஆகியவற்றிற்குச் செல்கின்றன. மற்றொரு வகை வழிகள் நியூயார்க்கிலிருந்து மையத் தரைப் பகுதி, தென் ஆப்பிரிக்கா கிழக்குத் தென் அமெரிக்கா, பனாமா ஆகிய பகுதிகளுக்குச் செல்கின்றன.

விமான வழிகள்

வட அட்லாண்டிக் - வட அமெரிக்கா : நேர் வழிகள் இலண்டனிலிருந்து நியூயார்க், சான்பிரான்சிஸ்கோ, மாண்ட்ரியல், சிகாகோ ஆகிய பகுதிகளுக்குச் செல்கின்றன. நேர்வழியில் வானிலை சரியில்லாமல் இருந்தால் விமானம் ஐஸ்லாந்தின் வழியாகச் செல்லும். இலண்டனிலிருந்து காரகாசுக்கு இரு நேர்வழிகள் உள்ளன.

கனடியப் பசிபிக் விமான வழி வேன்கோவரி விருந்து ஆம்ஸ்டர்டாமுக்குச் சென்று, பின் எட்மண்டனுக்கு வருகிறது. ஸ்காண்டிநேவிய விமான வழி கோபன்கேகனிலிருந்து லாஸ் ஏஞ்சலுக்குச் சென்று பின் சாண்ட்ரி ஸ்டாம்பியர்டுக்கு வருகிறது. புதியதொரு ஸ்காண்டிநேவிய விமான வழி கோபன் கேகனிலிருந்து லாஸ் ஏஞ்சல், டோக்கியோ சென்று (வழி அலாஸ்காவிலுள்ள ஆன்கரேஜ்), பின் நேராக வட முனை வழியாகச் செல்கிறது.