பக்கம்:அட்லாண்டிக் பெருங்கடல்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

35

உள்ளது. கடலின் அடியிலிருந்து இதன் உயரம் 15,980 அடி. இதன் கூம்பு வடிவம், இஃது ஓர் ஓய்ந்தொழிந்த எரிமலை என்பதைக் காட்டுகிறது.

அர்ஜண்டைனா கடற்கரைக்கு அப்பால் தென் அட்லாண்டிக் கடலில் ஒரு பெரிய குடைவு உள்ளது. ஒலிப்பு அளவீடுகளிலிருந்து இதுபற்றித் தெரியும் செய்திகளாவன. கடல் தரையிலுள்ள இக்குடைவு கீழே ½ - 1 மைல் ஆழமும், மேலே 5 - 12 மைல் அகலமும், நீளம் பலநூறு மைல்களும் உள்ளன. அர்ஜண்டைனா வழியாக ஒரு காலத்தில் ஓடிய பனிக் கால ஆற்றிலிருந்து வந்த படிவினால் இக்குடைவு உருவாகியுள்ளது என அறிவியலார் நம்புகின்றனர்.

1965-இல் அமெரிக்காவும், பிரான்சும் அட்லாண்டிக் கடலில் உள்ள பியர்டோ ரிகோ அகழியினை (Puerto Rico Trench) ஆராய்ந்தன. இது 450 மைல் நீளமுள்ளது. அடியிலுள்ள சமவெளி 150 மைல் நீளமும் 27,150 அடி ஆழமும் உள்ளது.

ஐஸ்லாந்து

இது ஒரு நீர் கீழ்ப்பள்ளத்தாக்கு; அட்லாண்டிக் கடலின் மைய மலைத்தொடரின் பகுதியாக உள்ளது. பிளவுப் பள்ளத்தாக்கு இத்தீவின் குறுக்கே நேரடியாகச் செல்கிறது. வெளியே தெரியும் மற்றொரு பகுதி சாக்கடலிலிருந்து கிழக்கு ஆப்பிரிக்கா வரை செல்கிறது. இப் பள்ளத்தாக்குகள் இயக்கம் உள்ளவை, இவை அடிக்கடி நில நடுக்கங்களை உண்டாக்குகின்றன. ஐஸ்லாந்து போல், சில இடங்கள் எரிமலை ஆக்கம் கொண்டவை.