பக்கம்:அட்லாண்டிக் பெருங்கடல்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



10. கடல் வள வியப்புச் செய்திகள்

இவ்வுலகில் 63 விலங்கு வகுப்புகள் இருப்பதாக அறியப்பட்டுள்ளன. இவற்றில் 51 வகுப்புகள் கடலில் வாழ்கின்றன. இவை 1,50,000 வகைகள் அடங்கிய கடல் விலங்குகளாகும். இந்த வகைகளில் அதிகமுள்ளவை நத்தை இனமாகும் (60,000 வகைகள்). அடுத்துள்ளளை 20,000 வகை நண்டினங்கள் ஆகும். அடுத்து மீன் வகைகள் 16,000 உள்ளன. ஏனைய வகைகள் மீதி கடல் உயிர்களாகும். மேலும் உலகக் கடல்களில் 300 ஆயிரம் வேறுபட்ட உயிர்கள் வாழ்கின்றன. கடல் ஆராய்ச்சியின் விளைவாக 100 புதிய கடல் உயிர்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன.

உலகின் 7 இல் 5 பங்கு கடலாலானது.

உலக எண்ணெய் உற்பத்தியில் 6 இல் ஒரு பங்கு கடல் படுகையிலிருந்து கிடைக்கிறது.

உலகக் கடல் நீர்களின் அளவு 329 மில்லியன் கன அலகுகள். கடலில் உணவு உண்டாக்கும் தாவரங்களில் பாதி டையாட்டம்கள், கடலில் காணப்படும் பிளாங்டான் முதல் நிலை உணவு உற்பத்தியாளர்கள். இவை மீன், திமிங்கிலம் முதலிய கடல் உயிர்களுக்கு உணவாகும்.

கடல் விலங்குகளும் தாவரங்களும் சிறந்த மருந்துகளையும் தருகின்றன. எடுத்துக்காட்டுகள் பின்வருமாறு:--