பக்கம்:அட்லாண்டிக் பெருங்கடல்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
வேறுபாடு


அட்லாண்டிக் பெருங்கடல் பசிபிக் பெருங்கடல்
1. வடிவத்தில் வளையம் போன்றுள்ளது; எல்லாப் பகுதிகளிலும் சமமாக அகண்டுள்ளது. கோழி முட்டை வடிவ முள்ளது.
2. உலகின் முனைகள் அல்லது துருவங்கள் நோக்கித் திறந்துள்ளது. ஆர்க்டிக் கடலோடு இதன் தொடர்பு மிகக் குறுகியது.
3. இதன் பெரும் நீளம் வடக்கிலிருந்து தெற்காக உள்ளது. இதன் பெரும் நீளம் கிழக்கிலிருந்து மேற்காக உள்ளது.
4. இதில் ஆற்று நீர் அதிகமாக கலக்கிறது. இதில் ஆற்று நீர் மிகக் குறைவாகக் கலக்கிறது.
5. இதன் தீவுகள் பெரியவை; அதிகம். தீவுகள் அதிகம்; ஆனால் அளவு வேறுபாடு உடையவை .
6. உலகிலுள்ள பெரும் ஆறுகள் எல்லாம் இதில் கலக்கின்றன. இதன் கரைகளில் ஒன்றில் மட்டுமே பெரும் ஆறுகள் வந்து விழுகின்றன.
7. உலகின் மிகச் சிறந்து வாணிப வழி. அவ்வளவு சிறப்புடைய வாணிய வழியல்ல.
8. இதன் அளவை நோக்கக் கடற்கரை மிக நீளமானது. கடற்கரை மிகக் குறுகலானது.