பக்கம்:அணியறுபது, செகவீரபாண்டியன்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6 முகவுரை

அழகைக் குறித்து வந்துள்ள இந்த ஆங்கிலக் கருத்துக்கள் ஈங்கு நன்கு ஊன்றி உணர்ந்து கொள்ளவுரியன.

மேலோர் பெரியோர் என உயர்ந்து வந்துள்ளவர் எவரும் இனிய குண நலன்களாலேயே யாண்டும் சிறந்து விளங்கி யிருக்கின்றனர். பான்மை இழந்தால் மேன்மை ஒழிந்து போகிறது.

அகுணஸ்ய ரூபம் ஹதம். குணம் இல்லாதவனது உருவ அழகு பாழ். குண ஹீதுநி சுந்தரரூபமு செடுது. குணம் அற்றவனின் அழகிய வடிவம் கெடும். ஆரியம், தெலுங்கு முதலிய மொழிகளும் அழகையும் குணத்தையும் இவ்வாறு சீர்தூக்கி நோக்கிநேரே அளந்து மொழிந்துள்ளன.

பெறலரிய பெரும்பேறகப் பெற்று வந்துள்ள இந்த மனிதப் பிறவிக்கு உரிய பெரிய அழகு எது? மீண்டும் பிறவித் துயரங்கள் நேராமல் தெளிந்து பேரின்ப நிலையைப் பெறுவதே யாம்.

அடுத்த எப்பிறவியும் அடையாமல் செய்து கொள்வதே எடுத்த இப்பிறவிக்கு அழகு. இந்த அதிசய ஆனந்தப்பேற்றை அடைய வுரிய வழிகளை இந்த அழகு நூல் ஒரளவு விழி தெரிய விளக்கி விழுமிய நிலையில் விளங்கியுளது.

திருவள்ளுவர் நிலையம், இங்ஙனம்,

மதுரை.

10—11—1964 செகவீரபாண்டியன்.