பக்கம்:அணியறுபது, செகவீரபாண்டியன்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



106

அ ணி ய று ப து

பண்டைக் காலத்திலிருந்த தமிழ் மக்கள் தம் தாய் மொழியை மிகவும் பெருமையாகப் பேணி வந்தனர். இக்காலத்தவர் அவ்வாறு பேணாமல் வீணே பிழை பட்டுள்ளனர். வாய்மொழி அளவில் ஆரவாரமாய்ப் பேசுகின்றனர். தமிழின் கலை நிலைகளையும் சுவைகளையும் கருதி நுகராமல் விருதா வழிகளில் இழிந்து வெறியராய் உழலுகின்றனர்.

எங்கள் தமிழ் எங்கள் குறள் என்றுஎதிரே
மாரடிப்பார்; இறையும் கல்லார்;
சங்கமுதல் பொங்கியுள்ள தமிழ்க்கலையைச்
சிறிதேனும் சார்ந்து காணார்;
தங்களிடம் இல்லாத பெருமைஎலாம்
இருப்பதாத் தருக்கு மீறி
எங்கணுமே இங்கிவர்கள் ஏறிநின்றால்
இந்நாட்டுக்கு உய்தி யுண்டோ ? (1)

மல்லல்வளம் பெருகிவரும் மாநிலத்தில்
மானிடர்கள் மாண்பு தோய்ந்து
நல்லவராய் ஓங்கியுயர் சான்றோரை
நாளுமே நாடி நாடி
எல்லையிலா ஆவலுடன் எவ்வழியும்
தேடுகின்றேன்; யாண்டும் காணேன்;
புல்லறிவும் புலைநிலையும் போய்த்தொலைந்து
புனிதர்என்று புகுவார் அம்மா ! (2}

இந்நாட்டு மக்கள் நிலைமையை எண்ணி எண்ணிக் கண்ணிர் வடித்துக் கவலையுற்றுள்ள இக்கவிகளைக் கருதியுணர்பவர் உள்ளம் உருகி மறுகுவர்.

ஆன்றோர் என்றது அறிவு அடக்கம் ஒழுக்கம் அமைதி முதலிய நீர்மைகள் நிறைந்துள்ன.