பக்கம்:அணியறுபது, செகவீரபாண்டியன்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அணியறுபது

111


தத்துவஞானி, வித்தகயோகி, உத்தமசித்தன் என உயர்பெயர் பெற்றுள்ளவர் எல்லாரும் பரமான்மாவைப் பரிவுடன் கருதி ஒளிபெற்றுள்ள முத்தர்களை. ஆன்மா நேரே பரம அனுபவம் வாய்ந்த போது அதிசய ஆனந்தம் தோய்ந்து வருகிறது.

தன் உயிரை நோக்கி வருபவன் தனிப்பரமனையே நோக்கி மகிழ்கிறான். மனிதனது அறிவு தெளிந்து புனிதம் அடைந்து வர இனிய பரமனாய் உயர்ந்து இன்பம் மிகப் பெறுகின்றான்.


42.ஒற்றுக் கணிஒர்ந் துரைத்தல்; உறுபசியின்
துற்றுக் கணியூட்டி உண்ணுதல்;-பற்றுக்கு :நித்தனடிச் சார்பே நிலைத்த அணி;நீள் ஒளியே
முத்துக் கணியாகும் முன்.

(ச.உ)

இ-ள்.

மருமங்களை நன்கு ஒர்ந்து உரைத்தல் ஒற்றர்க்கு அழகு: பிறர்க்கு ஊட்டி உண்ணுதல் உணவுக்கு அழகு; ஈசன் திருவடியே உரிமையாய்ப் பற்றுதற்கு அழகு; நல்ல ஒளியே முத்துக்கு அழகு என்க.

ஒற்றர் என்பவர் அரசுக்கு உரிய கருமத் துணைவர். காட்டில் அங்கங்கே நிகழுகின்ற நிகழ்ச்சிகளை ஒற்றி அறிந்து உரிமையுடன் உறுதியாய் உரைப்பவர் ஆதலால் இவரைக் கண்போல் கருதி அரசர் எவ்வழியும் செவ்வையாப் போற்றி வருவர்.

ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும் தெற்றென்க மன்னவன் கண்.

(குறள்,581


மன்னவனுக்குக் கண்போல் உள்ள ஒற்றர் எதையும் கூர்ந்து நோக்கி ஒர்ந்து வந்து தேர்ந்து தெளிவாய் உரைக்கும் அளவு உயர்ச்சியுறுகின்றார்.