பக்கம்:அணியறுபது, செகவீரபாண்டியன்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

112

அ ணி ய று ப து


துற்று = துய்க்கும் உணவு. அதிதிகளுக்கு முதலில் ஊட்டி அதன் பின்பு உண்ணுபவன் மதிநலம் வாய்ந்த புண்ணியவான் ஆகின்றான்.

முற்றுத்தும் துத்தினை நாளும் அறம்செய்து :::பிற்றுத்துத் துத்துவர் சான்றவர்-அத்துத்து :::முக்குற்றம் நீக்கி முடியும் அளவெல்லாம் :::துக்கத்துள் நீக்கி விடும்.
(நாலடியார் 190)

விருந்து அருந்த உதவுபவர் பெருந்தகையாளராய் உயர்ந்து சிறந்த பதவிகளை அடைவர் என இது குறித்துள்ளது. குறிப்பைக் கூர்ந்து உணர்க.

என்றும் நித்தியமாய் நிலைத்துள்ள இறைவனை அன்புடன் பற்றினால் துன்பப் பற்றுகள் நீங்கிபோம்; இன்ப நிலைகள் எங்கும் ஓங்கி வரும்.

பற்றுக பற்றற்றான் பற்றினை என்றார் தேவர்.


43
மானம் அழியாமை மன்னுயிருக் கின்னணி
ஊனம் உறாமை உடற்கணி-போனதை
எண்ணி இரங்காமை ஏந்தற் கணிஎவர்க்கும்
புண்ணியமே நல்ல அணி.

(௪௯)

இ-ள்

நிலைபெற்ற உயிருக்கு அழகு மானம் அழியாமை; உடலுக்கு அழகு ஊனம் உறாமை: கழிந்து போனதை நினைந்து இரங்காமை சிறந்த அறிஞர்க்கு அழகு; புண்ணியமே யாவருக்கும் மேலான நல்ல அழகு என்க.

இழிவான பழிகள் யாதும் அணுகாமல் தன்னைப் பாதுகாத்து வருவது எதுவோ அதுவே மானமாம்.