பக்கம்:அணியறுபது, செகவீரபாண்டியன்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

! 14 அணியறுபது

சிறந்த மலர்மாலை அணிவதற்கு மன்னர் மார்பே மாண்பமைந்த அழகு மறிந்து கொழிக்கும் அலைகளே கடலுக்கு அழகு என்க.

   தேட்டு = தேடிச் சேர்க்கும் செல்வம்.
தீய வழியில் வந்தது எவ்வழியும் தீமையே 

தரும். ஆதலால் அவ்வாறு பொருளே ஈட்டலாகாது. நல்லவர்கள் தொடர்பே யாண்டும் நல்லது; கெட்டவர் அணுகின் கேடேயாகும். பொல்லாதவர்களோடு யாண்டும் எவ்வகையிலும் யாதும் பழகலாகாது.

கல்லார்க் கினனாய் ஒழுகலும், காழ்கொண்ட இல்லாளேக் கோலால் புடைத்தலும், - இல்லம் சிறியாரைக் கொண்டு புகலும் இம் மூன்றும் அறியாமையால் வரும் கேடு. (திரிகடுகம் 3)
கல்லாத மூடரோடு கூடுதல், இல்லாளைச் சாடுதல், பொல்லாத புல்லரை வீட்டுக்கு அழைத்து வருதல் இவை கேட்டுக்கு அறிகுறிகளாம் என இது காட்டியுள்ளது. தனக்கு நன்மையும் சுகமும் அடைய விரும்புகின்றவன் புல்லருடன் பழகாமல் நல்ல சீலமுள்ளவர்களோடே என்றும்பழகி வரவேண்டும்.

45. செல்வர்க் கணிசெருக்குச் சேராமை தேர்ந்துநின்ற கல்விக் கணியிழுக்கம் காணுமை-செல்வழிக்குச் செய்ய அறமே சிறந்த அணி சீர்மைக்கு மெய்யே உயர்ந்த அணி.

(சடு) இ-ள்.

செருக்கு உருமை செல்வர்க்கு அழகு: இழுக்கு உருமை கல்விக்கு அழகு; மறுமைக்கு அறமே அழகு: சீர்மைக்குச் சத்தியமே சிறந்த அழகு என்க.