பக்கம்:அணியறுபது, செகவீரபாண்டியன்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அணியறுபது

177

 இவை ஈண்டு ஊன்றி உணர வுரியன.

ஈகையைக் குறித்து அயல் நாட்டாரும் எவ்வாறு எண்ணி யுள்ளனர்? என்பதை இவற்றால் நாம் ஒர்ந்து உணர்ந்து தேர்ந்து கொள்கிறோம்.

தன் உயிர்க்கு நன்மையை நாடி வருபவன் எவ்வுயிர்க்கும் இதம்செய்துவரவேண்டும். பிற உயிர்கள் இன்புற உதவி புரிந்து வருகிற மனிதனைத் தேவர்களும் ஆவலோடு நோக்கி உவந்து வருகின்றனர்.

பிறர்க்குச் செய்கிற இதங்கள் எல்லாம் புண்ணியங்களாய்ப் பொலிந்து வருதலால் அந்த உபகாரி எண்ணரிய மேன்மைகளையும் இன்ப நலன்களையும் எளிதே அடைந்து கொள்கின்றான்.


47.காலம் கருதல் கருமத்துக் கான அணி;::சீலம் புரிதலுயர் சீவனணி; - ஞாலம் ::அறிந்தொழுகல் வாழ்வுக் கரியஅணி நேர்மை ::செறிந்தொழுகல் சீர்மைக் கணி.

(சஎ)

இ-ள்

.

காலம் கருதி முயல்வதே கருமத்துக்கு அழகு; சிலம் படிந்து ஒழுகுவதே சீவனுக்கு அழகு; உலகம் அறிந்து நடப்பதே வாழ்வுக்கு அழகு; நெஞ்சம் நேர்மையாய் ஒழுகலே சீரிய மேன்மைக்கு அழகுஎன்க.

மனிதன் கருதிச் செய்கிற காரியங்கள் இனிது நிறைவேறி வருதற்கு உரிய பருவத்தை ஒர்ந்து உணர்ந்து உரிமையாக் கொள்ள வேண்டும்.

பருவத்தே பயிர்செய்! என்றார் ஒளவையார்.