பக்கம்:அணியறுபது, செகவீரபாண்டியன்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

118

அணியறுபது



பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத் தீராமை யார்க்கும் கயிறு.

(குறள் 482)

காலத்தோடு பொருந்தி முயன்றுவரின் செல்வம் நிறைந்துவரும் எனத் தேவர் இவ்வாறு கூறியுள்ளார். உரிய பருவம் பெரிய திரு.

காலம் அறிந்தாங்கு இடம் அறிந்து செய்வினையின்
மூலம் அறிந்து விளைவறிந்து - மேலும்தாம் சூழ்வன சூழ்ந்து துணைமை வலிதெரிந்து ஆள்வினை ஆளப் படும்.

(நீதிநெறி 52)

கருமங்களைச் செய்ய உரிய மருமங்களை இது நன்கு விளக்கியுளதுவினையாளன் முதலில் உரிமையோடு கருத வேண்டியது காலமே என்பதை இதில் தலைமையான நிலைமையால் அறிந்து கொள்கிறோம்.

நெறிமுறையே ஒழுகி வருகிற ஒழுக்கம் சீவனைத் தேவன் ஆக்கி அருளுகிறது. ஆகவே சீலம் சீவனுக்கு அணி என வந்தது. நேர்மை சீர்மையை அருளுகிறது.


48. எழுத்துக் கணிசொல்லே இன்சொற் கணிதான்
வழுத்தும் பொருளின் வளமே-அழுத்தும் ::பொருளுக் கணியாப்பே போதமுயர் யாப்பிற்கு
அருளும் அணியே அணி.

(ச.அ)

இ-ள்
எழுத்துக்கு அழகு சொல்லே, சொல்லுக்கு அழகு பொருளே; பொருளுக்கு அழகு யாப்பே; யாப்புக்கு அழகு அணியே என்க,

கலை நிலைகளுக்கு மூலமாயுள்ள ஐந்து வகைகள் இங்கே தொகையாய் அறிய வந்துள்ளன.வார்ப்புரு:HWS