பக்கம்:அணியறுபது, செகவீரபாண்டியன்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

124

அணியறுபது

அரிய சோதி

திருக்குறளே! நீதோன்றிச் செந்தமிழில் செழுஞ்சோதி எங்கும் வீசி அருக்கன் என நிலவியிந்த அகிலவுல கங்களுக்கும் அறிவு காட்டிப் பெருக்கமுடன் நின்றுள்ளாய்! தமிழர் எனப் பிறந்தவர்உன் பெருமை ஒர்ந்தே உருக்கமுடன் ஒழுகி ஒளி பெறும்நாளே

உயர்நாளாம்; உறுநாள் என்றோ? (2)

தெய்வ நிதி.

தேவர் அருள் அமுதான திருக்குறளாம் தெய்வநிதி எந்த வீட்டில் மேவியுளது, அவ்வீடே மேலான மெய்வீடாம்; மேவல் இன்றேல் பாவ இருள் படர்ந்தறிவு பாழான பழிவீடாம்; பழிநே ராமல் ஆவலுடன் பயின்றுயர்வார் அமரர்.என இலங்குவார் அறிவு கூர்ந்தே. {3)


கதியின்பம்

வள்ளுவரை வான்குறளே வாயளவில் பேசுகின்றார்; மக்கள்முன்பு தெள்ளுரைகள் பலகூறித் தெளிந்தவர்போல் நடிக்கின்றார்; சிந்தை கூர்ந்தே உள்ளுணர்வை, உறுபொருளே, உயர்சுவையை, உண்மையாய் ஒர்ந்து வாழ்ந்து கள்ளமற ஒழுகுவார் எவர் அவரே கதியின்பம் காண்கின்றாரே. (4)