பக்கம்:அணியறுபது, செகவீரபாண்டியன்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அணியறுபது

131


உணர வேண்டியதை உரிமையோடு உணராமல் ஊனமாயுழல்வது ஞான சூனியமாய் வளர்ந்துளது.

மாயத் தோற்றமாய் மருவியுள்ள உடல், பொருள், மனைவி, மக்கள் முதலிய பொய்யுறவுகளையே மெய்யென்று நம்பி வைய மையல்களில் அழுந்தி வருதலால் வெய்ய துயரங்களையே எவ்வழியும் அடைந்து வேதனைகள் படிந்து உழல்கின்றான்.

பிறப்பும் இருப்பும் சூழல்களும் அவனை மறப்பில் ஆழ்த்தி மயக்கி வருகின்றன. மறப்பு நீங்கிய பொழுதுதான் பிறப்பின் மெய்யான பயனை அவன் பெற நேர்கின்றான். தன்னை உண்மையாக அறிய நேர்ந்த அன்றே பெரிய மகானாய்ப் பேரின்ப நிலையைப் பெற்றவனாகின்றான். அறியாத வரையும் வெறியனாயலைந்து வீணே விரிந்து திரிகின்றான்.

எல்லாம் அறியும் அறிவு, தனைவிட்டு
எல்லாம் அறிந்தும் இலாபம் அங்கு இல்லை;
எல்லாம் அறிந்த அறிவினை நான்என்னில்
எல்லாம் அறிந்த இறைஎனல் ஆமே.

(திருமந்திரம் 2596)

கருமூலம் கட்டறுத்த திருமூலர் இவ்வாறு தெளிந்து மொழிந்துள்ளார். வெளியே எல்லாவற்றையும் அறிய வல்ல அறிவு ஆன்மாவாகிய தன்னை உள்ளே நோக்கி உரிமையுடன் உணரவில்லையானால் அது பயன் அற்ற பாழ் அறிவே என்று எள்ளியிகழ்ந் துள்ளமை இங்கே உள்ளி யுணர வுரியது.

வானத்தின் நீளம், சூரிய மண்டலத்தின் எல்லை, சந்திர மண்டலத்தின் அளவு, விண் மீன்களின்