பக்கம்:அணியறுபது, செகவீரபாண்டியன்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

134

அணியறுபது

 உயர்கிறான். நல்ல சொல் நலம்பல தருதலால் அவ்வுரை உயிர்க்கு உயரமிர்தம் ஆகிறது.


தன் மனத்தை மாசு படியாமல் எவன் பாதுகாத்து வருகிறானே அவன் ஈசன் அருளை எளிதே அடைந்து கொள்கிறான். உள்ளம் தூய்மைதோய்ந்து வர உயிர் பேரின்ப வெள்ளம் தோய்ந்து வருகிறது.


மனமும் வாக்கும் காயமும் மாசுறாமல் பேணிவரின் அரிய மகிமைகள் காண வருகின்றன.உயர்ந்த குலமகனுக்குச் சிறந்த அடையாளம் எவரையும் இகழ்ந்து பேசாமையே. பிறரை இகழ்பவன் இழிமகனாய் அழிவுறுகின்றான். மானம் மரியாதைகள் இன்றித் துடுக்காய்ப் பேசுபவர் ஈன மக்களாய் இழிவே அடைகின்றனர். மோனத்தை முதலில் குறித்தது ஏன்? எனின், ஞானத்தின் நிலையமாயுள்ள அதன் தானத்தையும் தலைமையையும் கருதி என்க. ஆன்ம ஞானம் தோய்ந்து வர நேரின் அமைதி அங்கே மேன்மையாய் வாய்ந்து வருகிறது.


உலக வாழ்க்கை பேச்சு வழக்கால் நடந்து வருகிறது; பரவாழ்க்கை பேசாத மோன நிலையில் பிறந்துளது. இருவகையும் கருதி அறிய வுரியன.


தேனைக் காணும் வரையும் வண்டு ஓலமிட்டு உலாவி அலைகிறது. கண்டால் ஒலி யாவும் அடங்கி அதனே உண்டு களித்துத் திளைத்துக் கிடக்கிறது.


அமுத மயமான ஆன்மாவை அறிய நேராதவர் அவல வாழ்வில் பல பல பேசி ஆரவாரமாய்ப்