பக்கம்:அணியறுபது, செகவீரபாண்டியன்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

136

அணியறுபது

 பேசாத மோன நிலையே பேச அரிய மகிமையுடைய ஈசனை நேரே காண நேர்கிறது,

பேசாத ஆனந்த நிட்டைக்கும் அறிவிலாப்
பேதைக்கும் வெகுதூரமே
பேய்க்குணம் அறிந்திந்த நாய்க்கும்ஒரு வழிபெரிய
பேரின்ப நிட்டை அருள்வாய்!


சொல்லாடா ஊமையைப்போல் சொல்இறந்து நீஆகின்
அல்லால் எனக்குமுத்தி யாமோ? பராபரமே!
கற்றாலும் கேட்டாலும் காயம்அழி யாதசித்தி
பெற்றாலும் இன்பம் உண்டோ? பேசாய் பராபாமே!
பேசாத மோனநிலை பெற்றன்றோ நின்அருளாம்
வாசாம கோசரந்தான் வாய்க்கும் பராபரமே!


பேசாத மோன நிலையால் பெறுகின்ற பேரின்பப் பேறுகளைக் குறித்துத் தாயுமானவர் ஈசனிடம் இவ்வாறு ஆர்வம்மீதூர்ந்து பரிந்து பேசியிருக்கிறார்.


ஆன்மாவை ஆழ்ந்து நோக்குவது மேன்மையான தியானமாம். பொறி புலன்களும் கரணங்களும் ஒடுங்கிய வழியே பரமானந்தம் உதயமாய் வருகிறது. ஆகவே பேசாத ஆனந்த கிட்டை என்று அது பேர் பெற்றுச் சீருற்று நின்றது.

அவத்தை பலவையும் அடக்கி அகிலமும்
அவிழ்ச்சி பெற இனிது இருக்கும் மவுனம்.(திருவகுப்பு 5)


அல்லல் பலவும் நீக்கி எல்லா நலன்களையும் மோனம் அருளும் என அருணகிரிநாதர் இங்ஙனம் அருளியுள்ளார். பேசா நிலையில் பேரின்பம் பெற்ற-