பக்கம்:அணியறுபது, செகவீரபாண்டியன்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

140

அ ணி ய று ப து



சிந்தை தெளியத் தெளியவல் லார்கட்குச்
சிந்தையின் உள்ளே சிவன்இருந் தானே. (1)

தானும் அழிந்து தனமும் அழிந்துநீ
டூனும் அழிந்து உயிரும் அழிந்துடன்
வானும் அழிந்து மனமும் அழிந்துபின்
நானும் அழிந்தமை நான்அறி யேனே. (2)

ஒழிந்தேன் பிறவி உறவென்னும்பாசம்
கழிந்தேன் கடவுளும் நானும்ஒன் றானேன்;
அழிந்தாங் கினிவரும் ஆக்கமும் வேண்டேன்
செழுஞ்சார் புடைய சிவனைக்கண் டேனே. (3)

(திருமந்திரம்)

யோக சமாதியில் திருமூலர் அனுபவித்துள்ள சிவானந்தப் பேற்றை இவற்றால் அறிந்து கொள்கிறோம். சிவனைக் கண்டேன்; சிந்தையின் உள்ளே சிவன் இருந்தான்; பிறவி ஒழிந்தேன் என மொழிந்துள்ள மொழிகள் உண்மை நிலைகளை உணர்த்தி உறுதி நலன்களைத் துலக்கியுள்ளன.

புலைப் பாசங்கள் ஒழிந்து மனத்தூய்மையுடன் தன்னை உண்மையாக் காண்பவன் பரமான்வையே காண்கின்றான். கண்ணுள் ஒளியாய் உயிருள் உயிராய் ஒளி செய்திருக்கின்ற பரஞ்சோதியைப் பரம யோகிகள் பார்த்துக் களித்துப் பரமானந்தமாயுள்ளனர்.

யானும் தானாய் ஒழிந்தானை
யாதும் யவர்க்கும் முன்னோனைத்
தானும் சிவனும் பிரமனும்
ஆகிப் பணைத்த தனிமுதலை