பக்கம்:அணியறுபது, செகவீரபாண்டியன்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

144

அ ணி ய று ப து



அறிவு அறியாமை கடந்து அறிவானால்
அறிவு அறியாமை அழகிய வாறே. (1)

அறிவு வடிவென்று அறியாத என்னை
அறிவு வடிவென்று அருள்செய்தான் நந்தி;
அறிவு வடிவென்று அருளால் அறிந்தே
அறிவு வடிவென்று அறிந்திருந் தேனே. (2)

(திருமந்திரம்)

அறிவே வடிவம் ஆன்மா: இதனை அறிவதே உண்மையான அறிவு: அதுவே தெய்வ ஒளியாய் எழில் மிகப் பெறுகிறது. இன்பம் நிறைகிறது. பரம யோகியான திருமூலர் இவ்வாறு ஆன்ம உணர்வை யாரும் அறிய அருளியுள்ளார்.

இன்பமயமான பரம்பொருளே உயிர் என உன்னுள் ஒளி செய்துளது. இந்த உண்மையை உரிமையுடன் உணர்க, உணரின் உயிர் உய்தி புணரும். இதனை உணராதது உணர்வாகாது.

இயல்அறிவது இசைஅறிவது இனம்அறிவது உளதாம்
அயல்அறிவது அறிவதல; அறிவுஅறிவது அறிவே. (1)

நவிலுகலை அறுபத்து நாலும்உணர் வாரும்
பவலயம தறுசுத்த பரமம் அறியாரே. (2)

ஆகஅறி வாளர்அறி வார்இவை அனைத்தும்
ஏகஅறி வாளர்இவை யாவும் அறியாரே. (3)

ஐயறிவு அறிந்தவை அடங்கினவர் ஏனும்
மெய்யறிவு இலாதவர்கள் வீடது பெறாரே. (4)

(மோகவதம்)

அறிவு நிலையைக் குறித்துத் தத்துவராயர் இவ்வாறு வித்தக விநயமாய் நன்கு விளக்கியிருக்கிறார்.