பக்கம்:அணியறுபது, செகவீரபாண்டியன்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

அணியறுபது

ஆழ்ந்து பரந்து விரிந்து நிறைந்துள்ள நீர்ப் பெருக்கை நிலையாக உடையது ஆதலால் கடலுக்கு ஆழி என்று ஒரு பேர் அமைந்தது. நிலமண்டலத்தைச் சலமண்டலம் சூழ்ந்திருப்பது அதன் நிலைமை தலைமைகளே நேரே நன்கு துலக்கி நின்றது.

ஐந்து பூதங்களும் காரண காரிய முறையே கலந்து நிற்கின்றன. அந்த நீர்மை சீர்மைகள் இந்த வாறு சிந்திக்க வந்தன.

யுகாந்த காலத்திலும் யாதும் நிலைகுலையாமல் தனிமுதல் தலைவனாய் நிலவி நிற்றலால் ஊழிமுதல்வன் என ஈசன் ஒளி பெற்றுள்ளான்.

வானும் வையமும் ஏதங்கள் நீங்கி இன்பமுற்று வாழும்படி மயில் ஊர்ந்தமையால் அயில்வேல் அமலனை வேதங்கள் ஏத்த நேர்ந்தன. அவல நீக்கமும் ஆனந்த ஆக்கமும் அதிசய ஆர்வங்களை விளைத்தன. அதனால் துதி செய்து போற்றின.

விரை மயில் என்றது அதன் விசித்திர வேகத்தையும், உக்கிர வீர பராக்கிரம நிலையையும்,உறுதியுண்மைகளேயும் உய்த்து உணர.

போரில் மூண்டு நீண்ட வீறோடு போராடிய சூரபன்மன் முடிவில் மயிலும் சேவலுமாய் நேரே மாறினன். மாறவே சேவலைக் கொடியாக ஏந்தி மயிலை வாகனமாக் கொண்டு முருகப் பெருமான் உலகம் உவந்து வாழ நலமா ஊர்ந்தருளினர்.

நூற்றெட்டு யுகமாக ஆயிரத்தெட்டு அண்டங்களே ஆண்டு வந்த அசுர வேந்தன் யாண்டும் மாண்டு