பக்கம்:அணியறுபது, செகவீரபாண்டியன்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அணியறுபது

155


மாய மையலான தீயஇருள்கள் ஊழிகாலமாய் உயிரைத் தொடர்ந்து படர்ந்து அடர்ந்துவரினும் ஞானம் உதயமானால் அப்பொழுதே அவை யாவும் அடியோடு அழிந்து ஒழிந்து போகின்றன.

பொய்யான ஈனமயல்கள் கடல்போல் பொங்கியிருந்தாலும் மெய்யான ஞான ஒளியின் எதிரே அவை விரைந்து விலகி மறைந்து ஒழிகின்றன.

ஞானம் என்னும் சொல் விரிவான பொருளையுடையது. என்றும் உண்மையாயுள்ள பரம் பொருளை உரிமையுடன் தெளிவாக உணர்வதே மெய்ஞ்ஞானமாம்.

அரிய பரமான்மாவை உரிய சீவான்மா நேரே அறிய நேர்ந்த அளவே அதிசய ஒளியாகிறது. ஆகவே வழிவழியாய்த் தொடர்ந்து வந்துள்ள இழிவுகள் எல்லாம் ஒளி கண்ட இருள் என ஒருங்கே ஒழிந்து போகின்றன,

எங்கும் நிறைந்து எல்லாம் அறிந்து என்றும் பரிபூரண சோதி மயமாயுள்ள இறைவனை உரிமையுடன் அறிவது பெரிய ஒரு ஞான பூசனையாம்.

எப்பொருள் களும்தான்ஆகி இலங்கிடப் படுவான்ஈசன்;
அப்படி விளங்குகின்றது அறிதலே அவன் தனக்கு
மெய்ப்படு பூசை; வேறார் செயலினால் அன்று மெய்யே;
இப்படி ஞானம் தன்னால் இறைஞ்சிடப் படுவான் ஈசன்.

(ஆனந்தத்திரட்டு)

ஞானத் தால்தொழு வார்சில ஞானிகள்
ஞானத் தால்தொழு வேன் உனை நான்அலேன்