பக்கம்:அணியறுபது, செகவீரபாண்டியன்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

156

அ ணி ய று ப து



ஞானத் தால்தொழு வார்கள் தொழக்கண்டு
ஞானத் தாய்உனை நானும் தொழுவனே

(அப்பர்-தேவாரம்)


சரியைஒண் கிரியைகால் தடுக்கும் யோகிவை
புரிபவர் தம்மைஅப் புரியும் செய்கையால்
தெரிதரல் ஆகும்ஒர் செயலும் இன்றிவாழ்
அரியநல் ஞானியை அறிய லாகுமோ?

(1)

நலமுறும் ஓர்சிவ ஞானி இல்லில்வாழ்
நிலையறம் ஆகினும், நீத்து நிற்கும்ஒர்
தலையறம் ஆகினும், தரித்து ஞாலமேல்
இலைமறை காய்என இருக்கும் என்பவே.

(2)

(பிரபுலிங்க லீலை)

ஈசனைஅறிந்த அந்தஇடத்திலே என்றும் எல்லாப்
பாசமும் நசித்தல்தானும் பணியறப் பவத்தின் தீர்வும்
காசுறும் அகில மாய கங்குலின் கழிவும் தானே
ஆசுறும் அகண்ட ரூபி யாகையும் அனைத்தும் எய்தும்.

(பிரமகீதை)

மங்கை பங்க! கங்கை நாயக! நின்
தெய்வத் திருவருள் கைவந்து கிடைத்தலின்
மாயப் படலம் கீறித் தூய
ஞான நாட்டம் பெற்றபின் யானும்
நின்பெருந் தன்மையும் கண்டேன்;காண்டலும்,
என்னையும் கண்டேன்; பிறரையும் கண்டேன்;
நின்னிலை அனைத்தையும் கண்டேன்;என்னை!
நின்னைக் காணா மாந்தர்
தன்னையும் காணா தன்மை யோரே.

(பட்டினத்தார்)