பக்கம்:அணியறுபது, செகவீரபாண்டியன்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அணி ய று பது

159

வந்திடும் மரணத் துன்பம்

மறித்துரை செய்யப் போமோ

உந்திமேல் ஐயும் பித்தும்

உணர்வொடு பொறி கலங்கி

நந்திடா இருளே மூடி

நாவுலர்ந்து அலமந்து என்னே

இந்தமா இறப்பின் துன்பம்

பவத்துன்பத்து எண்மடங்கே
(மெய்ஞ்ஞான விளக்கம்)

இவ்வாறு துன்பங்கள் நேராமல் சாவது ஒர் அரிய பேறாம். அநாயாச மரணம் அதிசய பாக்கியம்.

மீண்டும் பிறவாமைக்கு வழி செய்.
நீண்ட செருக்கை நெஞ்சில் கொள்ளாதே.
இதமாய் மாண்டுபட இறைவனை வேண்டுக.
யாண்டும் நல்லதையே செய்க.




59.உயிர்க்கணி தன்னை உயர்பரனுக் கீந்தே
அயிர்ப்பில் அவனை அடைதல்-உயிர்ப்பில்
நிலைநேரு முன்னே நிலையாமை தேர்ந்து
தலைநேரல் தக்கார்க் கணி.

(ருகூ)

இ-ள்

தன்னை முழுதும் சிவனுக்குக் கொடுத்துத் தான் சிவமயம் ஆவதே சீவனுக்கு அழகு; சாவு நேருமுன் நிலையாமை நிலையைத் தெளிந்து தலையாய நிலைமையை அடைவதே தக்கவர்க்கு அழகு என்க.

உறுதியான உய்திநிலை உணர வந்தது.