பக்கம்:அணியறுபது, செகவீரபாண்டியன்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அ ணி ய று ப து

163

 ஆகவே தன் உயிர் துயர் உறாமல் என்றும் உயர்வாயிருக்க வேண்டின்’யாண்டும் பிறவாமையை அவன் அடைந்துகொள்ள வேண்டும். முடிவாக மனிதன் வேண்டி அடையவுரியது ஈண்டு விளங்கி நின்றது.

வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை; மற்றது
வேண்டாமை வேண்ட வரும். (குறள், 362)

தனக்கு உரிமையாக ஒருவன் விரும்பத்தக்க பெருமையுடையது பிறவாமையே; உலக ஆசைகளை அறவே துறந்து எதையும் விரும்பாதபோது தான் அந்தப் பெரும்பேறு அவனை விரும்பி வந்து அடைகிறது எனத் தேவர் இவ்வாறு கூறியிருக்கிறார். இதில் குறித்துள்ள உண்மையாக் கூர்ந்து ஒர்ந்து கொள்ள வேண்டும். ஈண்டு எதை வேண்டினும் அது நீண்ட துயரமேயாம்.

துன்பத்தை எவரும் விரும்பார்; இன்பத்தையே யாவரும் யாண்டும் ஆவலோடு விரும்பி வருகின்றனர், இத்தகைய இயல்பினையுடைய மக்கள் எல்லாத் துன்பங்களுக்கும் எவ்வழியும் நிலையமாயுள்ள பிறப்பினை அடையலாமா? பேரின்ப நிலையமான பிறவாமையையே யாண்டும் உறவா அடைந்து கொள்ள வேண்டும்.

பிறந்தோர் உறுவது பெருகிய துன்பம்;
பிறவார் உறுவது பெரும் பேரின்பம்;
பற்றின் வருவது முன்னது; பின்னது
அற்றோர் உறுவது அறிகென்று அருளி

.

(மணிமேகலை 2)