பக்கம்:அணியறுபது, செகவீரபாண்டியன்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

அணியறுபது



வெயில்விடும் அநந்த கோடி
வெய்யவர் திரண்டு ஒன்றாகிப்
புயல்தவழ் கடவுள் வானிற்
போந்திடு தன்மை யேபோல்
அயிலினை உடைய செவ்வேள்
மரகதத்து அழகு சான்ற
மயிலிடை வைகி ஊர்ந்தான்
மாகமும் திசைகள் முற்றும்.

(4)

(கந்தபுராணம்

அமரர் இடர் தீர்த்த குமரக் கடவுள் மயில் வாகனப் பெருமானாய்க் காட்சி தந்துள்ள மாட்சியை இங்கே கண்டு வியந்து உவந்து களிக்கின்றோம்.

உததியிடை கடவுமர கதவருண குலதுரக
உபலளித கனகரத சதகோடி சூரியர்கள்
உதயம்என அதிகவித கலபகக மயிலின்மிசை
உகமுடிவின் இருளகல ஒருசோதி வீசுவதும்:

(சீர்பாத வகுப்பு)

வடவரை ஒரா யிரமுழை தோறும்
வருங்கொடி மினல்எனவே
வாள்தரு கவர்நா நீள விதிர்த்திடு
மாசுண ராசனையே
கடகரி எட்டும் சென்னி கவிழ்த்துக்
கால்கள் மடித்திடவெம்
கடுவே கத்துடன் ஒடிக் குத்திக்
கதிர்செறி புஞ்சம்என
படமுடி தாழ எடுத்து தறிப்பர
தத்தின் நடித்திடும்ஒர்
பருமயில் கடவும் பவளக் குன்றே
பால சமுத்திரமே